பயனீட்டாளர் புகார்கள் குறைந்தன

சேவை, பொருள் குறித்து பயனீட்டா­ளர் தெரிவித்த புகார்­கள் கடந்த ஆண்டில் 9.76 விழுக்­காடு குறைந்­துள்­ள­தாக சிங்கப்­பூர் பய­னீட்­டா­ளர் சங்கத்­தின் அண்மைய புள்­ளி­வி­வ­ரங்கள் தெரி­விக்­கின்றன. மொத்­தத்­தில் பய­னீட்­டா­ளர் சங்கத்­தில் 2015ல் 22,319 புகார்­கள் செய்­யப்­பட்­டன. 2014ன் 24,721 புகார்­களு­டன் ஒப்பிட இது குறை­வா­கும். கடந்த 10 ஆண்­டு­களில் முதல்­முறை­யாக 'டைம்ஷேர்' துறை தொடர்­பாக மிகக் குறைந்த புகார்­களே செய்­யப்­பட்­டுள்­ளன. 2014ஐ காட்­டி­லும் சென்ற ஆண்டின் புகார்­களின் எண்­ணிக்கை 38.3% குறைவாக இருந்ததை புள்­ளி­வி­வ­ரங்கள் காட்டின. இத்­துறை­யில் தவறாக நடக்­கும் நிறு­வ­னங்களைச் சமா­ளிக்க சங்கம் மேற்­கொண்ட முயற்­சி­கள் இதற்­குக் காரணம். அதே­நே­ரத்­தில் மோட்டார் கார்கள் துறை சார்ந்த புகார்­கள் 37.6% அதி­க­ரித்­துள்­ளது. 2014ல் 2,112 ஆக இருந்த புகார்­களின் எண்­ணிக்கை 2015ல் 2,907 ஆக உயர்ந்­துள்­ளன. புகார்­கள் அதி­க­முள்ள துறையாக நான்கா­வது ஆண்டா­கத் தொடர்ந்து இத்துறை உள்ளது.

பயன்­படுத்­தப்­பட்ட கார்கள் தொடர்­பாக சங்கத்­தி­டம் வந்த புகார்­களில் 70 விழுக்­காட்­டுக்­கும் அதி­க­மா­னவை குறை­யுள்ள பொருட்­கள் தொடர்­பா­னவை. இதற்கு அடுத்­த ­நிலை­யில். 1,668 புகார்­கள் மின்­னி­யல் துறையில் செய்­யப்­பட்­டுள்­ளன. மூன்றா­வது அதிகப் புகார்­கள் செய்­யப்­பட்ட துறையாக, 1,664 புகார்­களைப் பெற்ற அழகுப் பரா­ம­ரிப்­புத் துறை உள்ளது. முதல் முறையாக 623 புகார்­களு­டன் மன­ம­கிழ் மன்றங்களும் பய­னீட்­டா­ளர் புகார்­கள் அதி­க­முள்ள முதல் 10 துறை­களில் இடம்­பெற்­றுள்­ளது. இப்­ பு­கார்­கள் பெரும்பா­லும் உறுப்­பி­னர் உரிமம் ரத்து தொடர்­பா­ னவை என சங்கம் கூறியது.

மோட்டார் வாகனத்துறைக்கு எதிரான புகார்கள் 37.6 விழுக்காடு குறைந்துள்ளன. கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!