தர்மசாலா: உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியில் செவ்வாய்க்கிழமை காலை தர்மசாலா விளையாட்டரங்கில் பங்ளாதேஷ் அணியும் இங்கிலாந்து அணியும் மோதின.
அதில் இங்கிலாந்து 137 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
முதலில் பந்தடித்த இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 364 ஓட்டங்கள் எடுத்தது.
தாவித் மலான் 140 ஓட்டங்கள் குவித்தார்.
இலக்கை விரட்டிய பங்ளாதேஷ் 48.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 227 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.