விண்வெளி ஆய்வில் சிங்கப்பூர் மாணவர்கள்

சுதாஸகி ராமன்

சுத்­த­மான காற்று, சேமிக்­கப்­பட்ட தண்ணீர், புது­ப்பிக்­கக்­கூ­டிய எரி­சக்தி, மனி­தர்­கள் நீடூழி வாழ ஊட்­டச்­சத்து ஆகி­ய­வற்றை செவ்வாய் கிர­கத்­தில் மனி­தர்­கள் எவ்வாறு விளை­விக்­க­லாம் என்பது பற்றிய ஆய்வில் சிங்கப்­பூரைச் சேர்ந்த 50 மாண­வர்­கள் பங்­கேற்­றுள்­ள­னர். செவ்வாய் கிரத்­திற்­குப் பயணம் மேற்­கொண்டு அங்கு மனி­தர்­கள் உயிர் வாழ்ந்து, ஒரு சமூ­கத்தை உரு­வாக்­கு­வது பற்றிய சாத்­தி­யக்­கூ­று­களைக் கண்ட­றி­யும் நோக்­கத்­து­டன் இந்த விண்வெளி ஆய்வு மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது. 'யூத் மிஷன் டு மார்ஸ்' எனப்­படும் இந்தத் திட்­டப்­ப­ணி­யில் சிங்கப்­பூர், பிரான்ஸ், அமெ­ரிக்கா ஆகிய நாடு­களைச் சேர்ந்த 150 மாண­வர்­கள் கலந்­து­கொள்­கின்றனர்.

ஜனவரி மாதத்­தில் தொடங்கப்­பட்ட இத்­திட்­டத்­தில் மாண­வர்­கள் பல­வி­த­மான நட­வ­டிக்கை­களை மேற்­கொண்டு கொடுக்­கப்­பட்ட திட்­டப்­ப­ணி­யின் நோக்கத்தை அடைய ஆவன செய்­கின்ற­னர். சிங்கப்­பூர் அறி­வி­யல் நிலையம், அமெ­ரிக்­கா­வின் ஹியூஸ்டன் நக­ரத்­தில் அமைந்­தி­ருக்­கும் 'ஸ்பேஸ் சென்டர் ஹியூஸ்டன்', பிரான்­ஸில் டுலூஸ் நக­ரத்­தின் 'சிட்டி டெ லெஸ்பாஸ்' ஆகி­ய­வற்­றால் இத்­திட்­டம் ஏற்பாடு செய்­யப்­பட்­டுள்­ ளது. இத்­திட்­டத்­தில் ஈடு­பட்ட சிங்கப்­பூரைச் சேர்ந்த 50 உயர்­நிலைப் பள்ளி மாண­வர்­கள், பொதுவாக உயர்­நிலைப் பள்­ளி­களில் கற்­பிக் ­கப்­படும் பாடத்­திட்­டத்­திற்கு அப்­பாற்­பட்ட அறி­வி­யல் சார்ந்த விவ ­ரங்களைக் கற்­றுக்­கொண்ட­னர்.

அமெ­ரிக்­கா­வி­லி­ருந்து சிங்கப்­பூ­ருக்கு வந்து செவ்­வாய்க் கிர­கத்­துக்­குச் செல்வது தொடர்­பான ஆய்வில் ஈடு­பட்ட ஆறு மாண­வர்­கள், சிங்கப்­பூர் அறி­வி­யல் நிலையம் ஏற்பாடு செய்த 'ரோபோட்­டிக்' பட்­டறை­யில் பங்­கேற்­ற­து­டன் இந்தத் திட்­டப்­ப­ணி­யில் ஈடு­பட்­டி­ருக்­கும் செயின்ட் கேப்­ரி­யல் உயர்­நிலைப் பள்ளியை சேர்ந்த மாண­வர்­களு­டன் உரை­யா­டி­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!