ஓராண்டு நிறைவு – முன்னோக்கியப் பார்வை!

சரித்திர நாயகர்கள், போற்றலுக்கும் ஆய்வுக்கும் உட்படும்போது, அது பெரும்பாலும் அவர்களுடைய இறந்தகால வரலாற்றை நோக்கிய மீள்வலியுறுத்தலாகவே அமைகின்றது. ஆனால், இதிலும் சிங்கப்பூரின் சரித்திர நாயகனும் இந்நாட்டுத் தோற்றுவாயின் முக்கிய காரணகர்த்தாவுமாகிய சிங்கப்பூரின் முதல் பிரதமர் திரு லீ குவான் இயூ மாறுபடுகிறார்.

அவருடைய தலைமைத்துவக் காலக்கட்டம் முதல் சென்ற ஆண்டு அவர் இயற்கை எய்தியது வரை, அவருடைய இருப்பும் இறப்பும் பல்வேறு காலக்கட்டங்களில் மக்களுக்கு ஒரு சிறந்த பாடக் கலைத்திட்டமாக இருந்து வந்துள்ளது. திரு லீயின் சமகாலத் தலைவர்கள் வழிநடத்திய நாடுகளின் நிலைமை தற்போது பிரச்சினைகளின் பிடிகளில் உழன்று கொண்டிருக்கையில் சிங்கப்பூர் மட்டும் இதற்கு விதிவிலக்காக இருக்கின்றது. இது அதிர்ஷ்டவசமாக நடந்திருக்கும் என அதிசயித்து அமர்ந்துவிட இயலாது. திரு லீயின் தலைமையின்கீழ் அவருடைய சகாக்கள் வகுத்திட்ட, காலச்சக்கரத்திற்குள் பெரும்பாலும் சிக்காத, பரந்துபட்ட கொள்கைகளும் திட்டங்களுமே காரணங்களாகும்.

திரு லீ குவான் இயூ மரணித்து ஓராண்டு ஆயினும், இதை சோகத்தில் சோர்ந்துவிடும் தருணமாகக் கருதாது, நாட்டின் முன்னேற்றத்திற்கான முக்கிய மைல்கல்லாகக் கருதவேண்டும்.

ஒன்றுமில்லாதவர்கள் என்று ஓரங்கட்டப்பட்ட காலத்திலிருந்து சிங்கப்பூரை முதல் நிலைக்குக் கொண்டுவரும் வரையில் திரு லீ முன்மாதிரியாகவே இருந்தார் என்பதே சிறப்பு. இவர் முன்வைத்த தாய்மொழிக் கொள்கை இதற்கு நற்சான்று. `ஆங்கிலம் வர்த்தகத்திற்கு, தாய்மொழி அடையாளத்திற்கு` என்று ஆணித்தரமாகச் சொன்ன ஒரே தலைவரெனில் அது திரு லீயாகவே இருக்கும். வளர்ந்த, பொருளியலில் காலூன்றிய நாடாக இருந்து, இந்தக் கொள்கை முன்வைக்கப்பட்டிருந்தால் அதன்மீதான பார்வை சாதாரணமாகவே இருந்திருக்கும். ஆனால், வாழ்வாதாரமே நிச்சயமற்ற ஒரு காலக்கட்டத்தில், திரு.லீ முன்வைத்த இக்கொள்கையானது முக்கியக் கருத்தாடலுக்குரியது.

நாடு வளரவேண்டுமெனில் வளர்ச்சி நிலையைக் கணிக்கப் பொருளியல் மட்டுமே அளவுகோல் அல்ல என்பதில் உறுதியாக இருந்தார் திரு லீ. முழுமையான வாழ்க்கையும் தரமான தனிமனிதக் குணங்களும் விழுமியங்களும் முக்கியமெனக் கருதியதால்தான், பல கடுமையான ஆனால் அத்தியாவசியமான சட்டங்களையும் திட்டங்களையும் செயல்படுத்தினார். அவர் முன்வைத்த திட்டங்களின் காரணமாக இப்பொழுது மக்கள் அத்திட்டங்களின் பலன்களை அனுபவிக்கின்றனர்.

திரு லீ மறைந்து ஓராண்டு ஆகிவிட்ட நிலையில் நாடு எவ்வாறு செயல்படுகின்றது என்ற மதிப்பெண் பட்டியல் போட இயலாது. இதற்குக் காரணம், திரு லீக்கு முன் அல்லது திரு லீக்குப் பின் என்று இயல்பாகக் காலவரையறை செய்யும் வரலாற்று உத்திமுறை இங்கு எடுபடாது. சிங்கப்பூரைப் பொறுத்தமட்டில், திரு லீயின் பார்வை எப்பொழுதுமே நாட்டின் அடிநாதமாக ஒலித்துக்கொண்டே இருக்கும்.

இனம், மதம் என்ற பார்வை அகற்றப்பட்டு, ஆற்றல் சார் நாடாக இருக்கும்போதுதான் நாட்டின் உண்மையான வளர்ச்சி அமைகின்றது. புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நியமன நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒன்பது உறுப்பினர்களில் மூவர் இந்தியர்கள். இதுகிட்டத்தட்ட 33.3 விழுக்காட்டாகும். ஒரு சிறுப்பான்மையினர் இவ்வளவு பிரதிநிதித்துவம் பெறுதல் என்பது இன்றைய உலக அரசியலில் சற்று ஆபூர்வம் என்றாலும் இங்கு அந்த மூவரும் இந்தியர்கள் என்பதைவிடச் சிங்கப்பூரர்கள் என்ற பார்வையே மேலோங்கி இருக்கின்றது. இந்த நிலைப்பாடு மற்ற அனைத்திலும் இருப்பதால்தான், இங்கு அனைத்து இனத்தினரும் மதத்தினரும் ஒன்றுசேர ஒற்றுமையாக வாழ முடிகின்றது. இதுவே இந்த ஓராண்டில் திரு லீ இல்லாத சிங்கப்பூர் தொடர்ந்து முன்னேறி வருகின்றது என்பதற்குச் சாட்சியாகும்.

திரு லீ குவான் இயூ அவர்களின் சாதனைகளையும் சோதனைகளையும் ஓராண்டு நினைவஞ்சலி என்கின்ற வட்டத்திற்குள் அடைத்துவிடக்கூடாது. அவருடைய வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம் - காமதேனு போன்று விஷயம் வேண்டுவோர்க்கு வற்றாமல், கொடுத்துக் கொண்டே இருக்கும்.

திரு லீ குவான் இயூவின் சாதனைகளை விளக்கும் பதாகைகளை நாடாளுமன்றக் கட்டத்தின் அருகே நிறுவும் ஊழியர்கள்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!