சிகிச்சை பெற விஜயகாந்த் சிங்கப்பூர் செல்கிறாரா? தேமுதிக மறுப்பு

சென்னை: தேர்தல் பிரசாரத்தைத் தொடங்குவதற்கு முன்னர் சிங்கப்பூர் பயணம் மேற்கொள்ள விஜயகாந்த் திட்டமிட்டுள்ளதாகவும் சிங்கப்பூரில் சிறப்பு சிகிச்சை பெற உள்ளதாகவும் வெளியான தகவலைத் தேமுதிக மறுத்துள்ளது. விஜயகாந்த் குறித்தும் தேமுதிகவைப் பற்றியும் அவதூறு செய்திகளையும் அடிப்படை ஆதாரமற்ற பொய்ச் செய்திகளையும் சில ஊடகங்கள் தொடர்ந்து வெளியிட்டு வருவதாக அக்கட்சியின் இளையரணிச் செயலர் எல்.கே.சுதீஷ் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுபோன்ற செய்திகளை வெளியிடாமல் உண்மைச் செய்திகளை மட்டுமே வெளியிட வேண்டுமென என அவர் ஊடகங்களைக் கேட்டுக் கொண்டுள்ளார். "தேமுதிக தலைவர் சிங்கப்பூருக்கு சிகிச்சைபெற செல்வதாக வெளியாகியுள்ள செய்தியில் எந்தவித உண்மையும் இல்லை," என சுதீஷ் மேலும் கூறியுள்ளார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!