பொங்கோலில் புதிய வாட்டர்ஃபிரண்ட் சாஃப்ரா

பொங்கோலில் புதிய வாட்டர்ஃபிரண்ட் சாஃப்ரா அடுத்த மாதம் 24ஆம் தேதி யிலிருந்து புதிய வாட்டர்ஃபிரண்ட் சாஃப்ரா பொங்கோல் பொது மக்களுக்குத் திறந்துவிடப்படும் என்று தற்காப்பு மூத்த துணை அமைச்சரும் சாஃப்ராவின் தலைவருமான திரு ஓங் யி காங் தெரிவித்துள்ளார். திரு ஓங் சாஃப்ரா பொங் கோலுக்கு நேற்று சென்று பார்வை யிட்டார்.

சாஃப்ரா பொங்கோலில் தற் போது நடைபெறும் கட்டுமானப் பணிகள் முழுமையடைந்ததும் சிங்கப்பூரின் வடகிழக்குப் பகுதி களில் வசிக்கும் கிட்டத்தட்ட 80,000 தேசி-ய சேவையாளர்களும் அவர்களது குடும்பத்தினரும் அங்குள்ள வசதிகளைப் பயன் படுத்தலாம். சாஃப்ரா பொங்கோலைக் கட்ட 64.4 மில்லியன் வெள்ளி செல வானதாகத் தெரிவிக்கப்பட்டது. இதுவே சிங்கப்பூரின் ஆறாவது சாஃப்ரா மனமகிழ் மன்றம் ஆகும். மற்ற சாஃப்ரா மனமகிழ் மன்றங்களில் இல்லாத ஒரு சிறப்பு வசதியை சாஃப்ரா பொங்கோல் கொண்டுள்ளது. Splash@Kidz Amaze என்று அழைக்கப்படும் நீர் விளையாட்டுத்தளம் அந்தத் தனிச் சிறப்பு வசதியாகும்.

சாஃப்ரா பொங்கோல் மேம்பாட்டுக் குழுத் தலைவர் திரு டேரன்ஸ் குவேக் (இடது), சாஃப்ரா தலைமை நிர்வாக அதிகாரி திரு எட்வர்ட் லியோங் (வலது) ஆகியோருடன் சாஃப்ரா பொங்கோலின் கட்டட மாதிரியைப் பார்வையிடுகிறார் சாஃப்ராவின் தலைவர் திரு ஓங் யி காங் (நடுவில்). படம்: சாஃப்ரா

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!