சிலம்பு கண்ட தமிழ்: பார்வை 2016

நித்திஷ் செந்தூர் - 'சிலம்பு கண்ட தமிழ்' என்ற கருப்­பொ­ரு­ளு­டன் நன்யாங் தொழில்­நுட்­பப் பல்­கலைக்­க­ழ­கத் தமிழ் இலக்­கிய மன்றம் நடத்­திய இலக்­கிய நிகழ்ச்சி ஒன்று சிலப்­ப­தி­கா­ரத்­தின் இலக்­கி­யச் சுவையை­யும் காப்­பி­யத்­தில் கூறப்­பட்­டுள்ள விழு­மி­யங்களைப் பற்­றி­யும் ஆராய்ந்தது. இம்­மா­தம் 19ஆம் தேதி நடை­பெற்ற இந்­நி­கழ்ச்­சி­யில் சுமார் 120 பேர் கலந்­து­கொண்ட­னர். பல்­கலைக்­க­ழக மாண­வர்­கள் 'சிலப்­ப­தி­கார மாநாடு' எனும் அங்கத்­தி­லும் பலதுறை தொழிற்­கல்­லூரி மாண­வர்­கள் குறும்ப­டப் போட்­டி­யி­லும் தங்களின் படைப்­பு­களை முன்வைத்­த­னர்.

நிகழ்ச்­சி­யின் முதல் பகு­தி­யில் பல்­கலைக்­க­ழக மாண­வர்­கள் 'நவீன யுகத்­தில் சிலப்­ப­தி­கா­ரம்' எனும் தலைப்­பில் தாங்கள் எழுதிய ஆய்வு கட்­டுரை­யின் சுருக்­கத்தைப் பார்வை­யா­ளர்­களுக்கு விருந்தாக்கினர். பலதுறை தொழிற்­கல்­லூரி மாண­வர்­கள் குறும்ப­டப் போட்­டி­யில், சிலப்­ப­தி­கா­ரத் தலைப்பு ஒன்றை­யொட்டி பத்து நிமி­டங்களுக்­குள் அவர்­கள் தயா­ரித்த குறும்ப­டத்தைப் பார்வை­யா­ளர்­களின் முன்பு காட்­டி­னர். புதிய தொழில்­நுட்­பத்தைப் பயன்­படுத்தி பழைய காப்­பி­யத்­தின் கதையை எடுத்­துக் கூறிய விதம் புத்­தாக்­க­மா­க­வும் இளை­யர்­களை ஈர்க்கக்கூடிய வகை­யி­லும் அமைந்­தி­ருந்தது. சிங்கப்­பூர் பலதுறை தொழிற்­கல்­லூரி மாண­வர்­கள் இப்­போட்­டி­யில் வெற்றி பெற்­ற­னர்.

கல்வி அமைச்­சின் உதவி இயக்­கு­நர், சிறப்பு ஆய்­வா­ள­ர் (தமிழ் மொழி) திரு.வேணு­கோ­பால் நிகழ்ச்­சி­யின் சிறப்பு விருந்­தி­ன­ரா­கக் கலந்துகொண்டார். அவர், "தமிழ் மொழியை அடுத்த நிலைக்கு கொண்டு செல்லும் மாபெரும் பொறுப்பு இளை­யர்­களின் கைகளில் உள்ளது. இலக்­கி­யத்­தின் வாயிலாக தமிழ்­மொ­ழி­யின் மீது ஆர்­வத்தை ஏற்­பாடுத்த வழி ­வ­குக்க வேண்டும்," என்று கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!