மூத்தோருக்கான சமூகக் கட்டமைப்புத் திட்டம்

சமூ­கத்­தில் மூத்­தோ­ருக்­கான ஆத­ர­வுச் சேவைகளை சிறந்த முறையில் ஒருங்­கிணைப்­ப­தற்­கான புதிய திட்டம் அடுத்த சில மாதங்களுக்­குள் தொடங்கப்­ப­ட­வுள்­ளது. சோதனை முறையில் மூன்று முதல் ஐந்து இடங்களில் நடை­முறைப்­படுத்­தப்­படும் இந்தத் திட்டம் வெற்­றி­யடை­யும்பட்­சத்­தில் மற்ற இடங்களுக்­கும் விரி­வு­படுத்­த­ப்படும். மூத்­தோ­ருக்­கான சமூகக் கட்­டமைப்பு பற்றி வர­வு­செ­ல­வுத் திட்ட உரையில் குறிப்­பிட்ட நிதி அமைச்­சர் ஹெங் சுவீ கியட், புக்கிட் மேராவில் இருக்­கும் தோங் கெங் மூத்தோர் நட­வ­டிக்கை நிலை­யத்தை நேற்று பார்வை­யிட்­ட­போது இந்த அறி­விப்பை வெளி­யிட்­டார்.

சுகாதார மூத்த துணை அமைச்­சர் டாக்டர் ஏமி கோர், தஞ்சோங் பகார் குழுத்­தொ­கு­தி­யின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ஜோன் பெரெரா ஆகியோர் நிதி அமைச்­ச­ரு­டன் சேர்ந்து நிலையத்தைப் பார்வையிட்டனர். லாப­நோக்­கற்ற அமைப்­பு­கள், பள்­ளி­கள், வர்த்­த­கங்கள் போன்ற­வற்றை உள்­ள­டக்­கி­ய­தாக இந்த ஆத­ர­வுக் கட்­டமைப்பு இருக்­கும். இதில் முழு­நே­ரப் பணி­பு­ரி­யும் அதி­கா­ரி­களைக் கொண்ட சிறிய குழு, மூத்­தோ­ரின் சுகாதார, சமு­தா­யத் தேவைகள் குறித்து ஆராயும்.

இந்தக் கட்­டமைப்­பு­களின் வழியாக மூத்தோர் தங்க­ளது சுகா­தா­ரப் பிரச்­சினை­களை முன்­ கூட்­டியே கண்ட­றிந்து, நல்ல முறையில் சமாளிக்க உதவ முடியும் என அர­சாங்கம் நம்­பு­கிறது. சுகா­தா­ரத்­து­டன் நட­மா­டும் மூத்­தோரைப் பல­வி­த­மான நட­ வ­டிக்கை­களில் ஈடு­பத்தி சுறு­சு­றுப் ­பு­டன் இருக்­க­ச் செய்யவும் இந்தத் திட்டம் உதவும் என நம்பப்­ படு­கிறது. "நமது சமூகம் வெகுவாக மூப்­படைந்து வரு­கிறது. நமது மூத்தோர் கௌர­வத்­து­ட­னும் உற்­சா­கத்­து­ட­னும் மூப்­படை­ய, மருத்­ து­வ­மனை­களுக்­குப் பதிலாக அக்­கம்பக்­கத்தை பரா­ம­ரிப்­புக் கவ­னிப்பு இடங்க­ளாக மாற்ற வேண்டும்," என்று திரு ஹெங் குறிப்­பிட்­டார்.

"தற்போது நடப்பிலிருக்கும் சமூக சேவை அலு­வ­ல­கங்கள் பரந்த சமூகத் தேவை­களைக் கவ­னித்­துக்­கொள்­கின்றன. ஆனால் சுகா­தா­ரப் பரா­ம­ரிப்­புத் தேவை­களுக்­காக சுகாதார மேம்பாட்டு வாரியம், மருத்­து­வ­மனை­கள் ஆகி­ய­வற்­று­டன் எவ்வாறு அணுக்­க­மா­கச் செயல்­படு­வது என்பது குறித்து ஆராய வேண்­டி­யுள்­ளது. எனவே இது ஒரு முக்­கி­ய­மான முயற்சி," என்றார் அமைச்­சர் ஹெங். டியும் எனவும் அவர் கூறினார்.

தஞ்சோங் பகார் குழுத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் பெரெரா (இடக்கோடி), நிதி அமைச்சர் ஹெங் சுவீ கியட் (இடமிருந்து நான்காவது), சுகாதார மூத்த துணை அமைச்சர் டாக்டர் ஏமி கோர் (இடமிருந்து ஐந்தாவது) ஆகியோர் தோங் கெங் மூத்தோர் நடவடிக்கை நிலையத்தில் இருந்த மூத்தோருடன் உரையாடினர். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!