நல்ல பண்புகள், வாய்ப்புகளை பயன்படுத்தும் திறன் தேவை

ருபனேஸ்வரன் ஞானசுப்ரமணியம்

வாழ்க்கையின் வெவ்வேறு கால கட்டங்களில் இளையர்களின் முன்னேற்றம் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு மாதிரியாக இருந்தா லும், முக்கியமான பண்புகளை மேம்படுத்துவது, வாய்ப்புகளைச் சரியாகப் பயன்படுத்துவது போன்ற திறன்கள் அவர்களை நல்ல தலைவர்களாக்கும் என்று டிபிஎஸ் குழும நிறுவனத்தின் தலைமை நிர்வாகி பியுஷ் குப்தா கூறியுள்ளார். சென்ற மாதம் 10ஆம் தேதி நடைபெற்ற சிண்டா இளம் தலைவர்களுக்கான கருத்தரங்கில் பங்கேற்ற சுமார் 90 மாணவர் களிடையே கலந்துரையாடியபோது இந்தக் கருத்தை திரு குப்தா பகிர்ந்துகொண்டார்.

ஒவ்வோர் ஆண்டும் சிண்டா இளையர் மன்றத்தால் நடத்தப்படும் இக்கருத்தரங்கு, பல்வேறு மேல் நிலைக் கல்விநிலையங்களில் பயி லும் இந்திய இளையர்களை ஒன் றிணைக்கிறது. சிங்கப்பூர் சமு தாயத்தில் நிலவும் முக்கிய பிரச் சினைகள் தொடர்பான விழிப்பு உணர்வை ஏற்படுத்துவதையே முக்கிய நோக்கமாக கொண்டிருக் கிறது சிண்டாவின் இளையர் தலைவர்களுக்கான கருத்தரங்கு. “நம்மிடையே தலைமைத் துவத்தைக் கண்டறிதல்,” என்ற கருப்பொருளுடன் மூன்று நாட்களுக்கு நடத்தப்பட்ட இந்தக் கருத்தரங்கு தேசிய பல்கலைக் கழகத்தின் ரிட்ஜ் வியூ ரெசிடென் ‌ஷியல் கல்லூரியில் நடைபெற்றது. அதில் இடம்பெற்ற முக்கிய அங்கங்களில் ஒன்றாக இருந்தது மாணவர்களுடன் தலைமைத்தும் தொடர்பாக திரு குப்தா நடத்திய கலந்துரையாடல்.

சிண்டா இளம் தலைவர்களுக்கான கருத்தரங்கில் பங்கேற்ற இளையர்களுடன் சிறப்புப் பேச்சாளரான டிபிஎஸ் குழும நிறுவனத்தின் தலைமை நிர்வாகி பியுஷ் குப்தா. படம்: சிண்டா

இப்பகுதியில் மேலும் செய்திகள்

ஒரு சிறப்பு விருந்தினராக எவ்வாறு உரை நிகழ்த்துவார் என்பதை இரு இளையர்கள் தங்கள் சகாக்களின் முன்னால் படைத்துக் காட்டினர். இளையர்கள் தங்கள் உரையைத் தாங்களே ஒரு கருப்பொருளின் அடிப்படையில் எழுதியும் இருந்தனர். படம்: சிண்டா

15 Jul 2019

தலைமைத்துவத் தேடலில் இளையர்கள் 

பண்புநலன்களின் முக்கியத்துவத்தை உணர்த்தும் கதையைக் குமாரி அபிராமி தன் தொடக்கநிலை ஒன்றாம் மாணவர்களிடம் படித்துக் காட்டுகிறார். (படம்: கல்வி அமைச்சு)

08 Jul 2019

வாழ்க்கைக்கும் வழிகாட்டும் கல்வியாளர்கள்