லாரன்ஸ் தற்பொழுது 'மொட்ட சிவா கெட்ட சிவா' என்ற படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். அந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி நடிக்கிறார். அவரை ஒரு பாடலில் நிற்க விடாமல் ஆட வைத்திருக்கிறாராம் லாரன்ஸ். பிரபுதேவா, லாரன்ஸ் போன்ற நடன இயக்குநர்களுடன் நடிப்பதில் சிரமம் என்னவென்றால் கடினமான நடன அசைவுகளை வைத்து கதாநாயகிகள் ஓய்ந்து போகும் அளவிற்கு அவர்களை ஆட வைத்துவிடுவார்கள். இவர்களின் படங்களில் ஆடினால் பிறகு ருத்ர தாண்டவமும் இலகுவாகி விடும். படத்துக்குப் படம் கடினமான வித்தியாசமான நடன அசைவுகளை முயற்சி செய்யும் லாரன்ஸ், நாயகிகளையும் அதேபோல் ஆடும்படி செய்து விடுவார். முன்பு டாப்சியை ஒரு பாடலுக்காக நான்கு நாட்கள் ஆட வைத்தாராம். அதுபோல் இந்தப் படத்தில் நிக்கியை ஆட வைத்திருக்கிறார் லாரன்ஸ்.
இந்தப் படத்தில் "அல்லாகிட்ட போனா அன்பா இருக்கணும், ஜீசஸ் கிட்ட போனா பாசமா இருக்கணும், ஏழுமலையான் கிட்ட போனா நேர்மையா இருக்கணும். இந்தச் சிவாகிட்ட வந்தா நல்லவனா மட்டும்தான் இருக்கணும், இல்லேன்னா செத்துப் போய்டுவ" என்று நீளமான பஞ்ச் வசனம் ஒன்றையும் லாரன்ஸ் பேசியிருக்கிறார்.