தமிழகத்தில் கூட்டணி ஆட்சி ஏற்பட அதிக வாய்ப்புள்ளது: வைகோ

மதுரை: தமிழகத்தில் கூட்டணி ஆட்சி ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாக மதிமுக பொதுச்செயலர் வைகோ கணித்துள்ளார். இது தொடர்பாக மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்கள் நலக் கூட்டணி யானது தமிழக அரசியலில் பிரமிக்கத்தக்க மகத்தான திருப்பத்தை ஏற்படுத்தப் போகி றது என்றும் தெரிவித்தார்.

ஊழல் இல்லாத ஆட்சி, மதுவை ஒழிக்கிற ஆட்சி, லஞ்சமில்லாத வெளிப்படையான கூட்டணி ஆட்சியை மக்கள் நலக் கூட்டணி ஏற்படுத்தும் என்றும் மக்களுக்காகப் பணி யாற்றுவதே மக்கள் நலக் கூட்ட ணியின் முதன்மை நோக்கம் என்றும் அவர் கூறினார். "தமிழகத்தில் இதுவரை தொகுதி உடன்பாடுகளுக்காக மட்டுமே பல்வேறு கூட்டணிகள் ஏற்படுத்தப்பட்டன. ஆனால் முதல்முறையாக கொள்கைக் காக குறைந்தபட்ச செயல் திட்டம் அமைத்து இந்தக் கூட்டணியை அமைத்துள்ளோம்.

"கடந்த சில மாதங்களாக இணைந்து பல்வேறு போராட் டங்களில் ஈடுபட்டுள்ளோம். வெள்ள நிவாரணப் பணிகளி லும் ஈடுபட்டோம். அதன் கார ணமாக எங்களுடைய கூட்டணிக் கட்சிகளுக்கு இடையே நல்ல புரிந்துணர்வு ஏற்பட்டுள் ளது. நெருக்கமும் நேசமும் நிலவுகிறது," என்றார் வைகோ. தமிழகத்தில் இதுவரை அமைந்த கூட்டணிகளில் இத்த கைய புரிந்துணர்வும் நெருக்க மும் காணப்பட்டதில்லை என்று குறிப்பிட்ட அவர், மாற்று அரசி யல் எழுச்சிக்காகவே மக்கள் நலக் கூட்டணி அமைக்கப்பட் டது என்று விவரித்தார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!