டிரம்ப்புடன் விவாதம்; செய்தியாளரின் அனுமதி அட்டை ரத்து

வா‌ஷிங்டன்: வெள்ளை மாளி கையில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அதிபர் டிரம்ப்புடன் விவாதத்தில் ஈடுபட்ட சிஎன்என் செய்தியாளரின் வெள்ளை மாளிகை அனுமதி அட்டை ரத்து செய்யப்பட்டது. புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் சிஎன்என் செய்தியாளர் ஜிம் அகோஸ்டா தொடர்ந்து பேசிய போது அவரது ஒலிவாங்கியை வெள்ளை மாளிகையின் பெண் அதிகாரி ஒருவர் பறிக்க முயற்சி செய்தார்.

அப்போது பெண் அதிகாரியை தமது கையால் தடுத்த ஜிம் அகோஸ்டா தொடர்ந்து கேள்வி கேட்டார். இந்நிலையில் சிஎன்என் செய்தியாளர் ஜிம் அகோஸ்டாவின் வெள்ளை மாளிகை அனுமதி சீட்டு ரத்து செய்யப்படுவதாக வெள்ளை மாளிகை ஊடகத் தொடர்பாளர் சாரா சாண்டர்ஸ் அறிவித்தார். வெள்ளை மாளிகையின் பெண் ஊழியர் மீது அவர் கை வைத்த தால் இந்த நடவடிக்கை எடுக்கப் படுவதாகவும் அவர் கூறினார். ஆனால் சாண்டர்ஸ் கூறியது 'பொய்' என்று ஜிம் அகோஸ்டா தெரிவித்துள்ளார். செய்தியாளர் கூட்டத்தில் பேசிய அதிபர் டிரம்ப், சிஎன்என் செய்தியாளர் 'முரட்டுத்தனமான, மோசமான நபர்,' என்று குறிப் பிட்டுள்ளார்.

மத்திய அமெரிக்காவிலிருந்து அமெரிக்காவில் குடியேறும் குடியேறிகளைப் பற்றி முன்பு டிரம்ப் தெரிவித்த கருத்து குறித்து செய்தியாளர் ஜிம் அகோஸ்டா கேள்வியெழுப்பினார். அப்போது அதிபர் டிரம்ப், "போதும், போதும்" என்று ஜிம் அகோஸ்டாவிடம் கூறி உட்காரச் சொன்னார். ஆனால் செய்தியாளர் ஜிம் அகோஸ்டா தொடர்ந்து பேசியதால் வெள்ளை மாளிகை பெண் ஊழியர் ஒருவர் அவரிடமிருந்து ஒலி வாங்கியைப் பறிக்க முயற்சி செய்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!