கங்கனா: என்னைத் துன்புறுத்தினார்கள்

தமிழில் 'தாம்தூம்' படத்­தில் ஜெயம்­ரவி ஜோடியாக நடித்­த­வர் கங்கனா ரனாவத். இந்­தி­யில் முன்னணி கதா­நா­ய­கி­யாக இருக்­கிறார். 'குயீன்' படத்­தில் நடித்­த­தற்­காக சிறந்த நடிகைக்­கான தேசிய விருது பெற்­ற­வர். இந்­நிலை­யில் மும்பை­யில் நடந்த புத்தக வெளி­யீட்டு விழா ஒன்றில் கங்கனா ரனாவத் கலந்­து­கொண்டு பேசியது பர­ப­ரப்பை ஏற்­படுத்தி உள்ளது. "நான் சினி­மா­வில் இப்போது முன்னணி நடிகை­யாக இருக்­கி­றேன். என் வளர்ச்சி மட்­டும்­தான் எல்­லோ­ருக்­கும் தெரி­கிறது. இந்த இடத்­துக்கு வரு­வதற்கு நான் பட்ட கஷ்­டங்கள் ஏராளம். "இந்த நிலையை அடைய பத்து ஆண்­டு­க­ளா­கப் போரா­டி­னேன். பல்வேறு அவ­மா­னங்களைச் சந்­தித்­தேன். அதனால் பலரால் புறக்­க­ணிக்­கப்­பட்­டேன். என்னை ரொம்பவே சங்க­டப்­படுத்­தினார்­கள். உடல் ரீதி­யா­க­வும் துன்­பு­றுத்­தப்­பட்­டேன்.

"இவை என்னை மன­த­ள­வில் பக்­கு­வப்­படுத்­தின. நமக்கு வெற்றி எதையும் கொடுத்­து­வி­டாது. ஆனால் தோல்­வி­களோ நல்ல பாடங்களைக் கற்­றுத்­த­ரும். "தோல்­வி­களும் கஷ்­டங்களும் எனக்கு முன்னேற வேண்டும் என்ற உத்­வே­கத்தை கொடுத்­தன. வெகுவாக நம்­பிக்கை ஊட்டின. அதன் கார­ண­மாக அவற்­றில் இருந்து இப்போது மீண்டு வந்து இருக்­கி­றேன். "எல்­லோ­ருமே வெற்றி தோல்வியை சந்­திக்­கி­றோம். எதுவும் இறு­தி­யா­னது அல்ல என்பதை உண­ர­வேண்­டும். குழந்தை­களுக்கு தோல்வியை சந்­திக்­கும் மனப்­பக்­கு­வத்தை பெற்றோர் ஏற்­படுத்த வேண்டும். "பெண்­களுக்கு எதிரான வன்­முறை­கள் அதிகம் நடக்கின்றன. எனது சகோதரி மீது கூட திராவக வீச்சு நடந்தது.

"பெண்­க­ளால் நிராகரிக்­கப்­படு­வதை ஏற்­றுக்­கொள்­ளும் மனநிலை ஆண்­களுக்கு வர­வேண்­டும். அதை ஏற்றுக் கொள்ளாதபோதுதான் இது­போன்ற தாக்­கு­தல்­களில் ஈடு­படு­கிறார்­கள். என் வாழ்க்கையைப் புத்­த­க­மாக எழுத முடிவு செய்­துள்­ளேன்," என்று கங்கனா ரனாவத் அந்த நிகழ்­வில் பேசினார். மேற்­கூ­றி­ய­வற்­றில் பல­வற்றை ஏற்­கெ­னவே பல பேட்­டி­களில் அவர் கூறி­யுள்­ளார். எனினும் பொது நிகழ்ச்­சி­யில் கலந்துகொண்டு வெளிப்­படை­யா­கப் பேசி­ய­தால்தான் தற்போது மிகுந்த பர­ப­ரப்பு ஏற்பட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!