அகுவேரோ ‘ஹாட்ரிக்’; வீழ்ந்தது ஆர்சனல் 

மான்செஸ்டர்: செர்ஜியோ அகு வேரோ போட்ட மூன்று கோல்கள் ஆர்சனலைத் தோற்கடித்தது. நேற்று அதிகாலை நடைபெற்ற ஆட்டத்தில் 3=1 எனும் கோல் கணக்கில் ஆர்சனலை வீழ்த்தியது மான்செஸ்டர் சிட்டி.
இந்த வெற்றியின் மூலம் இங்கிலிஷ் பிரிமியர் லீக்கில் முன்னிலை வகிக்கும் லிவர் பூலுக்கும் தனக்கும் உள்ள இடைவெளியை சிட்டி குறைத் துள்ளது.
தற்போது வெறும் இரண்டு புள்ளிகள் வித்தியாசத்தில் சிட்டி இரண்டாவது நிலையில் உள்ளது.
ஆட்டம் தொடங்கியதிலிருந்து சிட்டி ஆதிக்கம் செலுத்தியது. ஒரு நிமிடத்துக்குள் அகுவேரோ சிட்டியின் முதல் கோலை போட்டார்.
துவண்டுவிடாமல் விளையாடிய ஆர்சனல் 11வது நிமிடத்தில் கோல் போட்டு ஆட்டத்தைச் சமன் செய்தது. முற்பாதி ஆட்டம் முடிவதற்குள் அகுவேரோ சிட்டி யின் இரண்டாவது கோலைப் போட்டார். இடைவேளையின்போது சிட்டி 2=1 என முன்னிலை வகித்தது. தாக்குதலில் தீவிரம் காட்டிய சிட்டி பல கோல் முயற்சிகளில் ஈடுபட்டது.
மாறாக, ஆர்சனல் நம்பிக்கை இழந்தது போன்று இருந்தது. பிற்பாதி ஆட்டத்தில் வலை நோக்கி அனுப்பிய பந்து ஒருமுறைகூட இலக்கை அடைய வில்லை.
இந்நிலையில், அகுவேரோ மூன்றாவது கோலைப் போட்டு சிட்டியின் வெற்றியை உறுதி செய்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!