சதாப்தி ரயிலுக்கு மாற்று ‘வந்தே பாரத்’ ரயில் சேவை

புதுடெல்லி: இந்தியாவின் முதல் இயந்திரமில்லா 'வந்தே பாரத்' ரயிலை பிரதமர் மோடி இம்மாதம் 15ஆம் தேதி புதுடெல்லி ரயில் நிலையத்தில் அதிகாரபூர்வமாக தொடங்கி வைக்கிறார்.
சென்னை பெரம்பூரில் உள்ள ரயில் பெட்டி தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட 'டிரெயின் 18' எனும் இந்த ரயிலை 'வந்தே பாரத்' என்று ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் அண்மையில் பெயர் மாற்றினார்.
பதினாறு பெட்டிகள் கொண்ட இந்த ரயிலுக்குத் தனியாக இயந்திரப் பெட்டி இருக்காது. இதற்குப் பதிலாக மற்ற பெட்டிகளுடன் இயந்திரம் இணைக்கப்பட்டு இருக்கும்.
மணிக்கு 180 கிமீ வேகம் வரை செல்லும் இந்த சோதனை ஓட்டம் கடந்த ஆண்டு வெற்றிகர மாக நடைபெற்றது.
இந்நிலையில் நாட்டின் முதல் இயந்திரம் இல்லா ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி வரும் 15ஆம் தேதி டெல்லியில் துவக்கி வைப்பார் என்று ரயில்வே துறை யின் மூத்த அதிகாரி ஒருவர் பிடிஐக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
"இந்த ரயில் உள்நாட்டுத் தயாரிப்பு என்பது பெருமைக்குரிய அம்சம்," என்றும் அந்த அதிகாரி குறிப்பிட்டார்.
இந்த ரயில் டெல்லியில் இருந்து வாரணாசி வரை இயக்கப் படும்.
இந்தியாவில் முப்பது ஆண்டு காலமாக இயக்கப்படும் சதாப்தி விரைவு ரயிலுக்கு மாற்றாக இது அமையும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!