ஹைதராபாத்: சீனாவின் லி நிங் விளையாட்டு நிறுவனத்துடன் இந்தியாவின் நட்சத்திர பூப்பந்து வீராங்கனையான பி.வி. சிந்து, ரூ.50 கோடி மதிப்பிலான (S$9.5 மில்லியன்) விளம்பர ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளார்.
நான்கு ஆண்டிற்கான இந்த விளம்பர ஒப்பந்தத்தில் அவர் கையெழுத்திட்டுள்ளார்.
உலகப் பூப்பந்தில் கையெழுத்திடப்பட்ட மிகப் பெரிய ஒப்பந்தங் களில் ஒன்றாக சிந்துவின் இந்த ஒப்பந்தமும் இடம் பெறுகிறது.
ஒப்பந்தமான இந்த ரூ.50 கோடியில், ரூ.40 கோடி விளம்பர ஆதரவுக்கும் ரூ.10 கோடி விளையாட்டு உபகரணங்களுக்கும் ஒதுக்கப்பட உள்ளது என அந்நிறுவனத்தின் பிரதான பங்குதாரரான மகேந்தர் கபூர் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த ஒப்பந்தத்திற்கான தொகை, 'பூமா' விளை யாட்டு நிறுவனத்திற்கும் இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் விராத் கோஹ்லிக்கும் இடையே ஒப்பந்தமான தொகைக்கு இணையானதாகும் எனவும் அவர் கூறினார்.
பிரேசிலின் ரியோ ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி மற்றும் உலக வெற்றியாளர் கிண்ணப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று பி.வி. சிந்து சாதனை படைத்து இருந்தார்.
ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனையாக பி.வி. சிந்து திகழ்கிறார்.
மேலும், உலகளவில் அதிக சம்பளம் பெறும் விளையாட்டு வீராங்கனைகள் தொடர்பாக 'ஃபோர்ப்ஸ்' சஞ்சிகை வெளியிட்ட பட்டியலில், பி.வி. சிந்து ஏழாவது இடத்தைப் பிடித்து இருந்தார்.
லி நிங் நிறுவனம் ஏற்கெனவே 2014/15 ஆண்டில் ரூ.1.25 கோடிக்கு சிந்துவை ஒப்பந்தம் செய்திருந்தது.
பின்னர் 2016ஆம் ஆண்டில் 'யோனெக்ஸ்' நிறுவனம் ஆண்டுக்கு ரூ.3.5 கோடி என்ற விகிதத்தில், மூன்று ஆண்டுகளுக்கு அவரை ஒப்பந்தம் செய்தது.
தற்போது இரண்டாவது முறையாக அதிக அளவிலான தொகைக்கு சிந்துவை லி நிங் நிறுவனம் ஒப்பந்தம் செய்திருக் கிறது.
இதேபோல கடந்த மாதம் இந்தியப் பூப்பந்து வீரர் கிதாம்பி ஸ்ரீகாந்த், இந்நிறுவனத்துடன் ரூ.35 கோடி மதிப்பில் நான்கு ஆண்டு ஒப்பந்தத்தில் கையெ ழுத்திட்டார்.
லி நிங் நிறுவனம் கடந்த ஆண்டு இந்திய ஒலிம்பிக் சங்கத்துடன் ஈராண்டு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டது.
அதன் ஒரு பகுதியாக, 2020ஆம் ஆண்டு ஜப்பான் தலைநகர் தோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கான உடைகள், காலணி ஆகியவற்றை இந்திய விளையாட்டு வீரர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு இந்த நிறுவனம் வழங்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சீன நிறுவனத்துடன் ரூ.50 கோடிக்கு விளம்பர ஒப்பந்தம் செய்த பி.வி.சிந்து
10 Feb 2019 04:25
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மே 1, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்.
சிங்கப்பூருக்குச் சேவையாற்ற கிடைத்த வாய்ப்பை மிகப் பெரிய கௌரவமாகக் கருதுகிறேன்.
சிபிஐபி: ஊழல் தொடர்பான புகார்கள் குறைந்தன, ஊழல் நிலவரம் கட்டுக்குள் உள்ளது
பிரியா மனம், பிரியாணி மணம். முழு காணொளி தமிழ் முரசு செயலியில். Mohamed Javed Indian Muslim Food: 473 Fernvale St, Singapore 790473
வேலையிடத்தில் படுகாயம் அடைந்த பங்ளாதேஷிய ஊழியர் மருத்துவமனையில் மாண்டார்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!