அடுத்த ஆண்டு நடுப்பகுதிக்குள் அமைச்சர்களின் தொகுதி உலாக்கள் நிறைவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இளம் அமைச்சர்கள் 90 தொகுதி உலாக்களை மேற் கொள்ள இருக்கின்றனர். இது வரை அவர்கள் ஏறத்தாழ 30 தொகுதி உலாக்களை நடத்தி முடித்துள்ளனர்.
தொகுதிவாசிகளின் உணர்வு களை நேரில் சென்று தெரிந்து கொள்ள இந்தத் தொகுதி உலாக்கள் நடத்தப்படுகின்றன.
இந்தத் தொகுதி உலாக்கள் கடந்த ஆண்டு ஜூலை மாதம் தொடங்கின. வாரந்தோறும் நடைபெறும் இந்தத் தொகுதி உலாக்களைக் கல்வி அமைச்சர் ஓங் யி காங் ஒருங்கிணைத்து வருகிறார்.
இளம் அமைச்சர்களின் தொகுதி உலாக்கள் திட்ட மிட்டபடி நடந்து வருவதாக திரு ஓங் தெரிவித்தார்.
"இதுவரை கிட்டத்தட்ட 30 தொகுதி உலாக்களை நடத்தி விட்டோம். இன்னும் 60 தொகுதி உலாக்கள் எஞ்சியுள்ளன.
"கடுமையாக உழைத்தால் ஓராண்டு மூன்று மாதங்களில் தொகுதி உலாக்களை முடித்து விடலாம்.
"ஒவ்வொரு வாரமும் நாங்கள் தொகுதிகளுக்குச் செல்கிறோம். எங்கள் வருகையைக் கண்டு குடியிருப்பாளர்கள் சில சமயங் களில் ஆச்சரியம் அடை கின்றனர். நாங்கள் அவர்களுடன் பேசி வருகிறோம். இதனால் பொதுமக்களின் கவலைகள், அக்கறைகள் ஆகியவற்றைப் பற்றி நன்கு தெரிந்துகொள்ள முடிகிறது," என்று செங்காங் சென்ட்ரலில் நேற்று தொகுதி உலா சென்றபோது செய்தியாளர் களிடம் திரு ஓங் தெரிவித்தார்.
செங்காங் சமூக மன்றத்துக்கு அவருடன் கலாசார, சமூக, இளையர் மூத்த துணை அமைச்சர் சிம் ஆன், உள்துறை மற்றும் சுகாதார அமைச்சுகளுக் கான மூத்த நாடாளுமன்றச் செயலாளர் அம்ரின் அமின், போக்குவரத்து மற்றும் கலாசார, சமூக, இளையர் அமைச்சு களுக்கான மூத்த நாடாளுமன்றச் செயலாளர் பே யாம் கெங் ஆகியோர் சென்றிருந்தனர்.
2020 நடுப்பகுதிக்குள் தொகுதி உலாக்கள் பூர்த்தி
18 Feb 2019 09:09 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 18 Feb 2019 09:20
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!