வாஷிங்டன்: அமெரிக்காவுக் கான சவூதி அரேபியத் தூதராக இளவரசி ரீமா பின்ட் பண்டார் அல்-சாத் நியமிக்கப்பட்டுள் ளார்.
சவூதி அரேபியாவில் பெண் ஒருவர் இப்பதவிக்கு நியமிக்கப் படுவது இதுவே முதல் முறை.
சென்ற சனிக்கிழமை அன்று சவூதி அரேபியா இந்த அறிவிப்பை வெளியிட்டது.
இளவரசி ரீமா தமது இளமைக் காலத்தை வாஷிங் டனில் கழித்தவர்.
சவூதி அரேபியாவைச் சேர்ந்த செய்தியாளர் ஜமால் காஷோகி துருக்கியில் உள்ள சவூதி அரேபியத் தூதரகத்தில் படுகொலை செய்யப்பட்டதால் அனைத்துலக அளவில் சவூதி அரேபியாவுக்கு அவப்பெயர் ஏற்பட்டுள்ளது. இந்தத் தருணத்தில் சவூதி அரேபி யாவின் தூதராக இளவரசி ரீமா நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜமால் காஷோகிக்கு என்ன ஆனது என்பது பற்றி மாறுபட்ட தகவல்கள் வெளியான நிலை யில் இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்துக்கு வந்த ஜமால் காஷோகி கொல்லப்பட்டார் என்பதை சவூதி அரேபியா பின்னர் ஒப்புக்கொண்டது.
சவூதி அரேபிய அரசாங் கத்தைக் கடுமையாக விமர் சித்து வாஷிங்டன் போஸ்ட் நாளிதழில் தொடர்ந்து பத்திரி கையாளர் ஜமால் காஷோகி கட்டுரைகளை எழுதி வந்ததால் அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
இதில் சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முஹமட் சல்மானுக்கு தொடர்பிருக் கலாம் என்று அமெரிக்கா சந் தேகிக்கிறது.
ஆனால் இதனை முஹமட் மறுத்துள்ளார்.
அமெரிக்காவுக்கான சவூதி அரேபிய தூதராக இளவரசி
25 Feb 2019 06:10 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 25 Feb 2019 09:27
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மே 1, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்.
சிங்கப்பூருக்குச் சேவையாற்ற கிடைத்த வாய்ப்பை மிகப் பெரிய கௌரவமாகக் கருதுகிறேன்.
சிபிஐபி: ஊழல் தொடர்பான புகார்கள் குறைந்தன, ஊழல் நிலவரம் கட்டுக்குள் உள்ளது
பிரியா மனம், பிரியாணி மணம். முழு காணொளி தமிழ் முரசு செயலியில். Mohamed Javed Indian Muslim Food: 473 Fernvale St, Singapore 790473
வேலையிடத்தில் படுகாயம் அடைந்த பங்ளாதேஷிய ஊழியர் மருத்துவமனையில் மாண்டார்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!