குறுகிய காலத்துக்குள் பல படங்களிலும் நடித்து மக்களிடையே புகழ்பெற்று வருகிறார் விஜய் சேதுபதி. அவருக்கு இப்போது தமிழ்ப் படங்களில் மட்டுமின்றி தெலுங்குப் படங்களிலும் வாய்ப்புகள் குவிவதாகக் கூறப்படுகிறது.
தமிழில் கதாநாயகனாக மட்டுமின்றி வில்லனாகவும் அதிரடி நடிப்பில் அசத்தி வரும் விஜய் சேதுபதி, இப்போது தெலுங் கிலும் வில்லனாக நடிப்பதற்கு ஒப்பந்தமாகி உள்ளார்.
தமிழில் முன்னணி நாயகனாக வலம் வரும் விஜய் சேதுபதி, 'சைரா' படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிப்பதன் மூலம் தெலுங்கில் அறிமுகமாகிறார்.
இதையடுத்து அவர் ஒரு புதிய தெலுங்குப் படத்தில் நடிக்க உள்ளதாகவும் டோலிவுட் தகவல்கள் தெரிவிக்கின்றன.
வைஷ்ணவ் தேஜ் நாயகனாக நடிக்க உள்ள படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிப்பதற்கு ஒப்பந்தம் ஆகியுள்ளார்.
சிரஞ்சீவி குடும்பத்தைச் சேர்ந்த வைஷ்ணவ் விரைவில் தெலுங்குப் படம் ஒன்றில் நாயகனாக அறிமுகமாக உள்ள நிலையில், விஜய் சேதுபதியும் அவருடன் இணைந்து நடிக்க உள்ளாராம்.
'சைரா' படத்தில் நடிப்பதன் மூலம் சிரஞ்சீவி குடும்பத்தினருடன் விஜய் சேது பதி நெருக்கமாகி உள்ளாராம்.
வில்லனாகும் விஜய் சேதுபதி
21 Mar 2019 11:19
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
வேலையிடத்தில் படுகாயம் அடைந்த பங்ளாதேஷிய ஊழியர் மருத்துவமனையில் மாண்டார்
சிங்கப்பூர் ஆகாயப்படை அருங்காட்சியகத்தில் குதூகலத் தமிழ் கற்றல்.
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!