ஆக்லாந்து: நியூசிலாந்து கிரிக் கெட் அணியின் தலைசிறந்த பந்தடிப்பாளராக கேன் வில்லி யம்சன் (படம்) மூன்றாவது முறை யாக சர் ரிச்சர்ட் ஹாட்லீ விருதைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.
நியூசிலாந்து கிரிக்கெட் அணித் தலைவர் கேன் வில்லி யம்சன் இந்தத் தலைமுறையின் தலைசிறந்த பந்தடிப்பாளர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார்.
இவரது தலைமையில் வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, இங்கிலாந்து, பாகிஸ்தான் மற்றும் பங்ளாதேஷ் அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடர்களை நியூசிலாந்து கைப்பற்றியுள்ளது.
இந்தப் பருவத்தில் கேன் வில்லியம்சன் டெஸ்ட் போட்டி களில் 925 ஓட்டங்களும் ஒருநாள் போட்டிகளில் 838 ஓட்டங்களும் டி20 கிரிக்கெட்டில் 332 ஓட்டங்களும் அடித்துள்ளார்.
ஆண்டுதோறும் சிறப்பாக விளையாடும் வீரர்களுக்கு நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் விருதுகள் வழங்கி கௌர விக்கிறது. மிக உயரிய விருதான சர் ரிச்சர்ட் ஹாட்லீ விருதை இந்த முறை கேன் வில்லியம்சன் வென்றுள்ளார்.
ஏற்கெனவே இரண்டு முறை இந்த விருதை வென்றுள்ளார். இதன்மூலம் மூன்று முறை சர் ரிச்சர்ட் ஹாட்லீ விருதைப் பெற்ற முதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். ராஸ் டெய்லர் இரண்டு முறை இந்த விருதைப் பெற்றுள்ளார்.
சாதனை படைத்த கேன் வில்லியம்சன்
23 Mar 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 23 Mar 2019 12:11
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
"ஆற்று தமிழ்த் தொண்டு, நுண்ணறிவு ஆற்றல் கொண்டு": மாணவர்களுக்கான போட்டி
சாங்கி விமான நிலையம் முனையம் 2ல் புதிய ஹோட்டல்
சப்தஸ்வரம் காணொளித் தொடர், நான்காம் பாகம் - மிருதங்க கலைஞர், கல்லிடைக்குறிச்சி சு சிவகுமாரின் 47 வருட கலைப் பயணம்
பாகிஸ்தானைச் சேர்ந்த 19 வயது பெண்ணுக்கு சென்னையில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஏப்ரில் 25, 2024, இன்றைய ஐந்து முக்கிய செய்திகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!