போர்ட்டோ: ஐரோப்பிய காற்பந்து சங்கம் புதிதாகத் தொடங்கிய நேஷன்ஸ் லீக் காற்பந்துப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் நேற்று அதிகாலை ஹாலந்தும் போர்ச்சுகலும் மோதின. இதில் போர்ச்சுகலின் கோன்சாலோ குடெஸ் ஆட்டத்தின் 60ஆம் நிமி டத்தில் போட்ட கோலால் அந்நாடு வாகை சூடியது.
போர்ச்சுகீசிய குழுவுக்கு வழக் கமாக விளையாடும் ஜோ ஃபெலிக்ஸ் என்ற வீரருக்கு பதிலாகக் களமிறங்கிய குடெஸ், சக வீரரான பெர்னார்டோ சில்வா வுடன் பந்தைத் தட்டிச்சென்று ஹாலந்து கோல் எல்லையிலிருந்து உதைத்த பந்து எதிரணி கோல்காப்பாளரின் கைகளுக்கு எட்டாமல் வலைக்குள் புகுந்தது.
இதற்கு பதிலடி கொடுக்க முடியாமல் ஹாலந்து ஆட்டத்தை 1-0 என்ற கோல் கணக்கில் இழந்தது.
பந்தைத் தங்கள் வசம் வைத்துக்கொள்வதில் போர்ச்சு கலைவிட ஹாலந்து தீவிரம் காட்டியபோதிலும் பந்து தங்கள் வசம் வந்ததும் அதைத் தட்டிச் செல்வதிலும் ஹாலந்துக்கு நெருக்கடியைத் தருவதிலும் போர்ச்சுகலே அதிக முனைப்புக் காட்டியதாக செய்தித் தகவல்கள் கூறுகின்றன.
போர்ச்சுகலுக்கு 2016ஆம் ஆண்டு ஐரோப்பிய கிண்ணத்தை பெற்றுத் தந்த ஃபெர்னாண்டோ சான்டோஸ் என்ற அதே பயிற்று விப்பாளரின் தலைமையில் போர்ச் சுகல் களமிறங்கியது குறிப்பிடத் தக்கது. ஐரோப்பிய கிண்ண இறுதிப் போட்டியிலும் பிரான்சை இதே 1-0 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகல் வெற்றிகொண்டது இங்கு நினைவுகூரத்தக்கது.
போர்ச்சுகல் கோல் போட்ட பின்னரே ஆட்டத்தில் சுறுசுறுப்புக் காட்டிய ஹாலந்து பல தாக்குதல் முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் அதனால் அபார ஆட்டத்திறனை வெளிப்படுத்திய போர்ச்சுகீசிய கோல்காப்பாளரான ருவி பெட்ரிசியோவை வெற்றி கொள்ள முடியவில்லை.