நாளை மறுதினம் மருத்துவர்கள் நாடு தழுவிய வேலைநிறுத்தம்

இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் அரசு மருத்து வர்கள் பாதுகாப்புக் கோரி நேற்று நான்காவது நாளாக போராட்டம் நடத்தி வந்த நிலையில், அம்மாநிலத்தில் கிட்டத்தட்ட 300 மருத்து வர்கள் பதவி விலகல் கடி தத்தை நேற்று சமர்ப்பித்தனர்.

மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கக் கோரி கோல்கத்தாவில் கடந்த திங்கட்கிழமையிலிருந்து அரசு இளநிலை மருத்துவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனால், மருத்துவப் பரா மரிப்புச் சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளி யிட்டன.

கோல்கத்தாவில் உள்ள என்ஆர்எஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் திங்கட்கிழமையன்று 80 வயதுக்கு மேற்பட்ட நோயாளி உயிரிழந்ததை அடுத்து அவருக்குச் சிகிச்சையளித்த இளநிலை மருத்துவர் ஒருவரை அந்நோயாளியின் குடும்ப உறுப்பினர்கள் தாக்கினர்.

இதில் தலை உள்ளிட்ட பகுதிகளில் காயம் அடைந்த இளநிலை மருத்துவர், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து மேற்கு வங்கத்தில் சக இளநிலை மருத்துவர்கள் வன்முறையை எதிர்த்துப் போராட்டத்தில் இறங்கினர்.

மருத்துவர் தாக்கப்பட்ட தற்கு எதிராக நடைபெற்று வந்த போராட்டம், டெல்லி, சட்டீஸ்கர் உட்பட பல மாநிலங் களுக்கும் பரவியுள்ளது.

அவர்களுக்கு ஆதரவாக அரசு மருத்துவர்களும் போராட் டத்தில் குதித்ததால் மேற்கு வங்க மாநிலத்தில் அரசு மருத்துவமனைகளில் மருத் துவச் சேவை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால், டெல்லி மருத்துவ மனைகளில் டயாலிசிஸ் உட்பட முக்கிய சிகிச்சைகளுக்கு நாள் குறிக்கப்பட்டவர்கள் வேறு மருத் துவர்களைத் தேடிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

போராட்டம் நடைபெறும் நிலையில் கோல்கத்தாவின் ஒரு மருத்துவமனைக்கு மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி நேற்று முன்தினம் நேரில் சென்று பார்வையிட்டார்.

நீதி வேண்டும் எனக் கூறி மருத்துவர்கள் குரல் எழுப்பிய நிலையில், வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள் நான்கு மணி நேரத்திற்குள் பணிக்குத் திரும்ப வேண்டும் என திருவாட்டி மம்தா கட்ட ளையிட்டார்.

மருத்துவர்களின் வேலை நிறுத்தத்தின் பின்னணியில் மத்திய அரசின் சதி உள்ளது என்று சாடிய அவர், மருத்துவர்கள் உரிய நேரத்தில் வேலைக்குத் திரும்பாவிடில் அவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக் கப்படும் என்று எச்சரித்தார்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளநிலை மருத்துவர்கள் குழுவி னரைச் சந்தித்த அவர், போராட் டத்தைக் கைவிடாவிடில் தங்கும் விடுதிகளிலிருந்து இளநிலை மருத்துவர்கள் வெளியேற்றப் படுவார்கள் என்றும் எச்சரித்தார்.

இருப்பினும், அவரது உத்தர விற்குச் செவிமடுக்காமல் மருத்து வர்கள் போராட்டத்தை நீட்டித்து வந்தனர்.

நாடு தழுவிய வேலைநிறுத்தம்

இந்நிலையில், நாளை மறு தினம் நாடு தழுவிய வேலை நிறுத்தம் நடைபெறும் என இந்திய மருத்துவர் சங்கம் நேற்று அறிவித்தது. போராட்டம் நடை பெறும் தேதிகளில் மருத்துவமனை களில் அவசர சிகிச்சைப் பிரிவு தொடர்ந்து இயங்கும்.

இந்த நெருக்கடி நிலையை முதல்வர் மம்தா கௌரவப் பிரச் சினையாக எடுத்துக்கொள்ளாமல், தீர்வு காண முன்வருமாறு மத்திய சுகா தாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் வலியுறுத்தி உள்ளார்.

மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்று உறுதியளித்த அவர், மருத்துவர் களைத் தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் உரிய பாதுகாப்பும் மட்டுமே மருத்து வர்கள் கோருவதைச் சுட்டினார்.

திருவாட்டி மம்தா தனது அணுமுறையை மாற்றிக் கொண்டால் மேற்கு வங்கம் மட்டுமன்றி இந்தியா முழுவதும் நோயாளிகள் பாதிக்கப்படுவது தடுக்கப்படும் என்றார் அவர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!