ஜூரோங் தீச்சம்பவம்: காயமடைந்த இருவரின் உடல்நிலை சீராக உள்ளது

ஜூரோங்கின் ஜாலான் புரோவில் உள்ள தொழிற்பேட்டையில் நேற்று முன்தினம் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் காயமடைந்த சீன நாட்ட வர்கள் இருவரின் உடல்நிலை சீராக இருப்பதாக நேற்று தெரி விக்கப்பட்டது. காயமடைந்த அவர்கள் சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

அவர்களில் ஒருவர் மருத்துவ மனையிலிருந்து நேற்று வீடு திரும்பியதாக வெளிநாட்டு ஊழியர் நிலையம் தெரிவித்தது. அந்த ஊழியருக்கு சிராய்ப்பு அல்லது வெட்டுக்காயங்கள் ஏற்பட்டிருக்கக்கூடும் என அறியப் படுகிறது.

அரசாங்க சார்பற்ற அமைப்பான அந்த நிலையம் நேற்று வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவு ஒன்றில் இந்தத் தகவலைத் தெரிவித்தது. மருத் துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மற்றோர் ஊழியர் கூடிய விரைவில் நலம் பெறுவார் என்று வெளிநாட்டு ஊழியர் நிலையம் கூறியது. தீக்காயங்களால் பாதிக் கப்பட்ட அந்த ஊழியருக்கு நேற்று அறுவை சிகிச்சை அளிக்கப்பட்ட தாக நம்பப்படுகிறது.

மருத்துவப் பணியாளர்களின் பராமரிப்பு அதிகம் தேவைப்படும் சிகிச்சைப் பிரிவில் அவர் உள்ள தாக சிங்கப்பூர் பொது மருத்துவ மனையின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.

எண் 43, ஜாலான் புரோவில் நேற்று முன்தினம் மாலை ஏற்பட்ட தீச்சம்பவத்தில் மற்றொரு சீன நாட்டு ஊழியர் உயிரிழந்ததை நிலையம் உறுதிப்படுத்தியது. அந்தத் தொழிற்பேட்டையில் நூற்றுக்கும் மேற்பட்ட எரிவாயு தோம்புகள் (எல்பிஜி) வெடித்ததில் தீ மூண்டது.

இச்சம்பவத்தில் உயிரிழந்த ஊழியரின் பெயர் வெய் ஸியாவ் யோங் என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழ் அறிகிறது. அவருக்கு வயது 43 என்று தெரிகிறது.

ஏறக்குறைய இரண்டு காற்பந்து விளையாட்டுத் திடல் அளவுள்ள அந்த வளாகத்தில் எல்பிஜி தோம்புகள் சேமித்து வைக்கப்பட்டு இருந்தன. அங்கு மூண்ட பெருந் தீயைக் கட்டுப்படுத்த பெருமள விலான தீயணைப்புப் படை வீரர்கள் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் போராடினர்.

தீச்சம்பவம் நிகழ்ந்த இடத்தில் இருந்து கிட்டத்தட்ட 4 கிலோ மீட்டர் தூரம் வரை வெடிப்புச் சத்தம் கேட்டதாக பலர் தெரி வித்தனர்.

சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினர் அணைத்த எல்பிஜி தொடர்பான ஆகப்பெரிய தீச் சம்பவம் இது என அதன் தரப்பில் கூறப்பட்டது. தீயை அணைக்க சம்பவ இடத்திற்கு சுமார் 120 தீயணைப்பாளர்கள் அனுப்பிவைக் கப்பட்டனர்.

காயமடைந்த இரு ஊழியர் களுக்கு சிறந்த முறையில் பரா மரிப்பு வழங்கப்படுவதை உறுதி செய்ய அவர்கள் பணிபுரியும் சம்பந்தப்பட்ட நிறுவனத்துடன் தான் இணைந்து பணியாற்றி வரு வதாக வெளிநாட்டு ஊழியர்கள் நிலையம் குறிப்பிட்டது.

அந்த ஊழியர்களின் மருத்துவ சிகிச்சைக்கான செலவுகளை ஏற்றுக்கொள்ள அந்நிறுவனம் இணங்கியுள்ளது.

அதோடு, அந்த இரு ஊழியர் களின் சார்பாக இழப்பீடு கோரு வதற்கு தேவையான ஆவணங் களை அந்நிறுவனம் திரட்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், தீச்சம்பவத்தில் உயிரிழந்த ஊழியருக்கான இறுதிச்சடங்கு ஏற்பாடுகளுக்கு தான் உதவி வருவதாக வெளி நாட்டு ஊழியர் நிலையம் குறிப் பிட்டது. அந்த ஊழியரின் நல்லு டலைச் சொந்த நாட்டிற்குக் கொண்டு செல்ல அவரது குடும் பத்தினருக்கு நிலையம் உதவி வருகிறது.

தீயணைக்கும் நடவடிக்கையில் ஏழு தண்ணீர் பீய்ச்சும் குழாய்களும் ஆளில்லா தீயணைப்பு இயந்திரம் ஒன்றும் பயன்படுத்தப் பட்டன. அருகிலிருந்த மற்ற எல்பிஜி தோம்புகளுக்கும் தீ பரவாமல் தடுக்க

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!