மீண்டும் போராட்டத்திற்குத் தயாராகும் ஹாங்காங் மக்கள்

ஹாங்காங்: நாடு கடத்தும் மசோதாவை முற்றிலுமாக கைவிடக் கோரி ஹாங்காங்கில் மீண்டும் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

சில குற்றங்களில் ஈடுபடுபவர்களை•சீனாவிற்கு நாடு கடத்தும் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஹாங்காங் மக்கள் கடந்த ஜூன் மாதம் 12ஆம் தேதி பெரும் போராட்டம் நடத்தினர்.

இந்த மசோதா நிறைவேறுவதைத் தடுக்க ஹாங்காங் அரசாங் கத்தின் தலைமையகத்தைச் சுற்றி போராட்டக்காரர்கள் மனித சுவர் அமைத்து, அதிகாரிகளை உள்ளே செல்லவிடாமல் தடுத்தனர்.

இதனால் மசோதா வாசிக்கப்படாமல் முடங்கியது. போராட்டமும் வெற்றி பெற்றது.

ஆனால், போராட்டக்காரர்களில் சிலர் போலிசார் மீது உலோக கம்பு களையும் கற்களையும் வீசியதால் வன்முறை வெடித்தது.

சுமார் 12 பேர் காயமடைந்தனர். பலர் கைது செய்யப்பட்டனர். ஹாங்காங் போலிஸ் அதனை வன்முறை என்று வகைப்படுத்தியது.

தொடர்ந்து ஏற்பட்ட நெருக்கடிக ளுக்கு இடையில் கடந்த செவ்வாயன்று கேரி லாம் சர்ச்சைக்குரிய மசோதா கைவிடப்பட்டது என்றார்.

ஆனால், மசோதா சட்டசபையில் நிறைவேற்றப்படக்கூடும் என்ற சந்தே கம் எழுந்த நிலையில், மீண்டும் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப் பட்டுள்ளது.

முதல் போராட்டம் நடந்து ஒரு மாதம் ஆன நிலையில், ஹாங்காங் தலைவர் கேரி லாம்மின் அலுவலகத்தை இவ்வார இறுதியில் முற்றுகையிட ஒன்றுகூடுமாறு நேற்று இணையங் களில் அழைப்பு விடுக்கப்பட்டது.

மசோதாவை முழுவதுமாக கைவிட வேண்டும், கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்கவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை அவர்கள் முன் வைத்துள்ளனர்.

மேலும் போராட்டம் குறித்து ஹாங் காங் போலிஸ் விசாரணை நடத்தும் என்று கடந்த வாரம் அறிவிக்கப்பட்ட தும் போராட்டக்காரர்களுக்கு ஏமாற் றத்தை அளித்துள்ளது.

நீதிபதியின்கீழ் சுதந்திரமான விசாரணை வேண்டும் என்கிறார்கள் போரா ட்டக்காரர்கள்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!