வெற்றிலை பாக்குக் கடையில் வெடிகுண்டுகள்: செயலிழக்க வைத்த போலிசார்

மதுரை: வெற்றிலை பாக்குக் கடை யில் வைக்கப்பட்ட வெடிகுண்டை மதுரை காவல்துறையினர் செயலி ழக்கச் செய்ததால் பெரும் உயி ருடற் சேதங்கள் தவிர்க்கப்பட்டன. இதனால் மதுரையில் காவல் துறையினரின் கண்காணிப்பு தீவிரமடைந்துள்ளது. வெற்றிலை பேட்டை பகுதியில் உள்ள அக்கடை பரீத்கான் (33 வயது) என்பவருக்குச் சொந்த மானது. செவ்வாய்க்கிழமை மாலை ஆறு மணியளவில் அவர் வெளியே சென்றிருந்த சமயத்தில் 30 வயது மதிக்கத்தக்க ஆடவர் அங்கு வந்துள்ளார். அப்போது கடையில் இருந்த பரீத்கானின் தம்பி மன்சூர்கானிடம் பீடா தரு மாறு கேட்டுள்ளார்.

மன்சூர்கான் அதை செய்து கொண்டிருந்தபோது, அருகிலுள்ள ஏடிஎம் மையத்துக்குச் செல்வதாகக் கூறிச் சென்ற அந்நபர் பிறகு திரும்பி வரவே இல்லை. இந்நிலை யில் இரவு 11 மணியளவில் கடையை மூட முற்பட்டபோது, அட்டைப்பெட்டி ஒன்று இருப்பதைக் கண்டார் பரீத்கான். அதுகுறித்து தன் தம்பியிடம் அவர் விசாரிக்க, முன்பின் அறிமுகமற்ற ஒருவர் ஆட்டோவில் வந்திறங்கி பீடா தருமாறு கேட்ட தாகவும் அவர் கொண்டுவந்த அட்டைப்பெட்டியை மறந்து வைத்துச் சென்றுவிட்டதாகவும் கூறியுள்ளார் மன்சூர்கான்.

பெட்டியைத் திறந்து பார்த்த போது அதில் பிளாஸ்டிக் குழாய் வெடிகுண்டு, டைம்பாம் ஆகியவை இருப்பதைக் கண்டு கடும் அதிர்ச்சியடைந்த பரீத்கான் உடன டியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார். விரைந்து வந்த வெடிகுண்டு நிபுணர்கள் அப்பெட்டியைக் கைப் பற்றி வெடிகுண்டுகளைச் செயலி ழக்கச் செய்தனர். இதனால் பெரும் சேதங்கள் தவிர்க்கப்பட்டுள் ளதாக போலிசார் தெரிவித்தனர். அப்பகுதியில் நிறுவப்பட்டிருந்த ரகசிய கேமராக்கள் பழுதாகி விட்டதால், வெடிகுண்டுகளை வைத்துச் சென்ற நபர் யாரென் பதை போலிசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை. மதுரையில் தொடர்ந்து வெடி குண்டுகள் சிக்கி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!