பொது சிவில் சட்டம்: கருணாநிதி கடும் எதிர்ப்பு

சென்னை: மத்திய அரசு கொண்டு வர நினைக்கும் பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வருவதற்கான முயற்சி களை மத்திய அரசு கைவிட வேண்டும் என திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார். இத்தகைய முயற்சியானது குளவிக்கூட்டுக்குள் கையை விடும் செயல் எனவும் அவர் குறை கூறியுள்ளார். பொது சிவில் சட்டம் குறித்து முதலில் அனைத்து அரசியல் கட்சிகளிடமும் நாட்டின் அனைத்து தரப்பினரிடமும் கருத் தொற்றுமை ஏற்படுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தி உள்ள அவர், இந்த விவகாரத்தில் சட்ட ஆணையத்தின் பரிந்து ரையைப் பெறுவது மட்டும் முக்கியமல்ல என்று கூறியுள்ளார்.

"பல்வேறு சமயங்கள் மற்றும் சாதிகளிடையே தலைமுறை தலைமுறையாகப் பின்பற்றப்பட்டு வரும் நெறிமுறைகளையும் நெடுங்காலப் பழக்க வழக்கங் களையும் ஒருங்கிணைத்து அனைவருக்கும் பொதுவான தொரு சிவில் சட்டத்தை ஏற்ப டுத்துவது என்பதும் எளிதான காரியமல்ல. "நமது நாட்டில் தீர்வு காணப் பட வேண்டிய பிரச்சினைகள் ஆயிரம் இருக்கும்போது பொரு ளாதாரச் சீர்திருத்தங்கள், நீதித் துறைச் சீர்திருத்தங்கள் எனப் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கை கள் நாள்தோறும் பெருகிவரும் போது பொது சிவில் சட்டம் என்னும் முன்னுரிமை இல்லாத, சிக்கலான பிரச்சினையைக் கையிலெடுக்க முயற்சிப்பது சரியல்ல," என்று கருணாநிதி மேலும் தெரிவித்துள்ளார். பல்வேறு மதங்களையும் சாதிகளையும் உள்ளடக்கிய பொது சிவில் சட்டம் என்பது செயல் வடிவம் பெற முடியாத ஒன்று என்றும் அது கற்பனைக் கும் ஒவ்வாத கருத்தியல் என்றும் கருணாநிதி அறிக்கையில் மேலும் கூறியுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!