வைரமுத்து: ஈழ மகா காவியம் படைப்பேன்

யாழ்: ஈழ மகா காவியம் ஒன்றை எழுதப் போவதாக கவிஞர் வைரமுத்து அறிவித்துள்ளார். இதை தமது வாழ்நாளின் பெரும் பணியாகக் கருதுவதாக வும் அவர் தெரிவித்துள்ளார். இலங்கை முல்லைத் தீவில், வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் தலைமையில் உழவர் பெருவிழா கொண்டா டப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராகக் கவிஞர் வைரமுத்து கலந்துகொண்டார்.

நிகழ்வில் சிறப்புரையாற்றிய அவர், தமது கடும் உழைப்பின் துணையோடு ஈழமகா காவியம் எழுதும் பணியை நிச்சயம் நிறைவு செய்யமுடியும் என நம்பிக்கை தெரிவித்தார். "ஆசியாவிலேயே அதிகம் கல்வி கற்ற இனம், இலங்கைத் தமிழினம். தமிழினத்தின் முக வரியை உலகம் எங்கும் எழுதி யவர்கள் இலங்கைத் தமிழர்கள். ஆனால், இன்று உங்கள் நம்பிக்கையைத் தவிர, எல்லா வற்றையும் இழந்து நிற்கிறீர்கள். "விழா தொடங்கும்போது, வானம் மெல்லிய தூறல் போடத் தொடங்கியது.

பெருமழையே வந்து விடுமோ எனப் பலரும் அஞ்சினர். எந்த மழை வந்தா லும் தமிழர்கள் கலையமாட் டார்கள் என்பது எனக்குத் தெரி யும். வெடி மழையிலேயே கரைந்து போகாத தமிழர்கள், இந்த இடிமழையிலா கரைந்து போவர்" என்றார் வைரமுத்து. வேளாண்மையில் நடவு முறையை விஞ்ஞானப்படுத்திய வர்கள் தமிழர்கள் என்று குறிப்பிட்ட அவர், அதனால் தான் திருவள்ளுவர் உழவுக்கு என தனி அதிகாரமே இயற்றி யதாகத் தெரிவித்தார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!