இலங்கையுடன் சிங்கப்பூர் நீடித்த பொருளியல் உறவு

சிங்கப்பூரும் இலங்கையும் தங் களது பொருளியல் உறவுகளை வளர்த்துக்கொள்வதற்குரிய வள மான சூழல் நிலவுவதாக பிரதமர் லீ சியன் லூங் கூறியுள்ளார். மேலும் அதிக சிங்கப்பூர் நிறுவனங்கள் இலங்கையின் பொருளியல் பங் காளிகளாக உருவெடுக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். சிங்கப்பூருக்கு மூன்று நாள் வருகை அளித்துள்ள இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவுக்கு பகல் விருந்து அளித்துப் பேசிய திரு லீ, இலங்கை தொழில் வட் டாரத்துக்கு சிங்கப்பூரர்கள் புதிய வர்கள் அல்லர் என்றார்.

"இலங்கையில் சுமார் நாற்பது ஆண்டுகளாக வர்த்தகம் புரிந்து வரும் பிரிமா ஹோல்டிங்ஸ் ஒரு இலங்கை நிறுவனம் என்று என் னிடம் இதற்கு முன்னர் தெரிவித் தனர். பல இலங்கைவாசிகள் கூட அவ்வாறுதான் நினைத்தார்கள். "ஆனால் அது ஒரு சிங்கப்பூர் நிறுவனம் என்று உண்மையை அறிந்த பின்னர் பலரும் வியப் படைந்தார்கள். இந்நிறுவனத்தைப் போலவே மேலும் அதிகமான சிங்கப்பூர் நிறுவனங்கள் இலங்கைப் பொருளியலில் நீடித்த உறவை வளர்க்கும் என்ற நம் பிக்கை எனக்கு உள்ளது. "இலங்கையின் பொருளியல் வளர்ச்சியிலும் ஆற்றலிலும் ஆர்வம் செலுத்துவதில் சில நிறுவனங் களிடம் காணும் எழுச்சியைப் பார்க்கும்போது மிகவும் உற்சாகமாக உள்ளது.

"உதாரணமாக, இலங்கையின் மேற்கு வட்டார மெகாபொலிஸ் போன்ற மாபெரும் வளர்ச்சித் திட்டங்களில் சுரபானா ஜூரோங் நிறுவனம் முக்கிய பங்கு வகித்து வருவதைக் குறிப்பிடலாம். "மேலும் அதிக வர்த்தக ஒத் துழைப்பை ஊக்குவிப்பதை நாம் தொடர வேண்டும். வெளிநாட்டு வர்த்தக உடன்பாட்டுப் பேச்சு வார்த்தையை நாம் துவக்க இருப் பதை எண்ணி மகிழ்கிறேன்.

"இந்த உடன்பாடு நிகழ்த்தப்பட் டால், இருதரப்பிலும் நிறுவனங் களுக்கும் முதலீட்டாளர்களுக்கும் பெரும் ஊக்குவிப்பாக அது அமையும். காரணம், ஆசியாவின் நுழைவாயிலாக சிங்கப்பூர் சேவை யாற்ற முடியும். "அதேநேரம் இலங்கையின் சீர் திருத்தப் பணிகளையும் வளர்ச்சியை யும் ஆதரிப்பதில் தன்னாலான சிறிய பங்கை ஆற்றமுடியும் என்பதை எண்ணி சிங்கப்பூர் மகிழ்கிறது. "காலையில் இலங்கைப் பிரதமர் விக்ரமசிங்கேவுடன் நல்லதொரு ஆலோசனை நடத்தினோம். அரசாங்க சேவைப் பயிற்சி, வாழ்க்கைத் தொழில் கல்வி, நகரத் திட்டமிடல் போன்றவை தொடர்பாக பல துணிச்சலான யோசனைகளை அவர் பகிர்ந்து கொண்டார்.

"இலங்கையுடன் இணைந்து பணி யாற்றும் வாய்ப்பு கிடைத்திருப்பதை நாம் வரவேற்கிறோம். நமது வலுவான கலாசாரத்தின் அடிப்படையில் மக் களோடு மக்கள் தொடர்பை ஏற் படுத்தும் நிலைமை ஏற்படும் என்ப திலும் நம்பிக்கை உள்ளது. "கொழும்பு நகருக்கு அப்பால் யாழ்ப்பாணம் போன்ற நகரங் களிலும் நமக்கு அறிமுகம் உண்டு. யாழ்ப்பாண பொது நூலகத்தின் பகுதியளவு புதுப் பிப்பிலும் புத்தக சேகரிப்பிலும் நமது தேசிய நூலக வாரியம் பங்களித்துள்ளது," என்று பிர தமர் லீ தமது உரையில் குறிப்பிட்டார்.

முன்னதாக, நேற்றுக் காலை இலங்கைப் பிரதமர் ரணிலுக்கு இஸ்தானாவில் சடங்குபூர்வ வரவேற்பு அளிக்கப்பட்டது. அதிபர் டோனி டான் கெங் யாமை அவர் சந்தித்துப் பேசிய போது இரு நாடுகளுக்கு இடை யிலான நீண்டகாலத் தோழமை அந்தப் பேச்சில் முக்கிய பங்கு வகித்தது. அரசாங்க சேவைக் கல்லூரி, சிங்கப்பூர் தேசிய கலைக்கூடம் போன்ற இடங்களை திரு ரணில் இன்று பார்வையிடுவார்.

பிரதமர் லீ சியன் லூங் அளித்த பகல் விருந்தில் அவருடன் இலங்கைப் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே (இடது). வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் நடுவே உள்ளார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!