தொகுதி எல்லை மறுஆய்வு அறிக்கை விரைவில் தாக்கல் செய்யப்படும்

தொகுதி எல்லை மறுஆய்வுக் குழுவின் அறிக்கை (இபிஆர்சி) இன்னும் தயாராகவில்லை என்றும் அது தயாரானதும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்றும் வர்த்தக தொழில் அமைச்சர் சான் சுன் சிங் தெரிவித்தார்.

“இபிஆர்சி குழு தனது பணியை முடித்த பிறகு, அதை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யும். பொதுமக்களுக்கும் அது வெளியிடப்படும்,” என்று பிரதமரின் சார்பில் திரு சான், அல்ஜுனிட் குழுத் தொகுதி உறுப்பினரான பாட்டாளிக் கட்சியின் தலைமைச் செயலாளர் பிரித்தம் சிங் கேட்ட கேள்விக்கு எழுத்துபூர்வமாகப் பதிலளித்தார்.

பிரதமர் லீ கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் நியமித்த இபிஆர்சி குழுவுக்குப் பிரதமரின் செயலாளர் தலைமை வகிக்கிறார். அடுத்த பொதுத் தேர்தலுக்கான முதற்படியாக அது கருதப்படுகிறது. இக்குழுவின் அறிக்கை வரும் பொதுத் தேர்தலில் தொகுதிகள் எவ்வாறு வரையறுக்கப் பட்டுள்ளது என்பதைத் தெளிவாகக் காட்டும். அதற்கு அடுத்தபடியாக அதிபர் நாடாளுமன்றத்தைக் கலைத்து, தேர்தல் நடத்தும் ஆணையைப் பிறப்பிப்பார்.

இந்த முறை இபிஆர்சி குழு குழுத் தொகுதிகளின் அளவை மேலும் குறைத்து அதிகமான தனித்தொகுதிகளை உருவாக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அடுத்த பொதுத் தேர்தல் 2021ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்துக்குள் நடத்தப்பட வேண்டும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!