வாட்ஸ்அப்: புதிய அம்சங்கள் அறிமுகம்

மறுஅழைப்பு (கால்பேக்), குரல் அஞ்சல் (வாய்ஸ்மெயில்) என ஒரு வாரத்திற்குள் இரு புதிய அம்சங் களை அறிமுகப்படுத்தி இருக் கிறது சமூக ஊடக கைபேசி செயலியான வாட்ஸ்அப். இந்த வசதிகள் ஆண்ட்ராய்ட் பீட்டா v2.16.189 இயங்குதளத்தில் மட்டுமே செயல்படும். வாட்ஸ்அப் பயனர் ஒருவர் அந்தச் செயலி மூலம் விடுத்த அழைப்பை எதிர்முனையில் இருப் பவர் எடுக்கவில்லை அல்லது அதைத் துண்டித்துவிட்டார் எனில் மீண்டும் அவரை அழைப்பதற்கு ஏதுவாக 'கால்பேக்' பொத்தான் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

வாட்ஸ்அப்பில் ஏற்கெனவே உள்ள 'வாய்ஸ்காலிங்' வசதியின் நீட்டிப்பே இந்த 'கால்பேக்', 'வாய்ஸ்மெயில்' அம்சங்கள். இந்த அம்சத்தைச் சோதித்துப் பார்க்க விரும்பினால் வாட்ஸ்அப் 'கான்டாக்ட்' பட்டியலில் உள்ள ஒருவருக்கு அழையுங்கள். அந்த நபர் உங்களது அழைப் புக்குப் பதிலளிக்கவில்லை எனில் அல்லது துண்டித்துவிட்டார் எனில் உங்கள் கைபேசித் திரை யில் 'கேன்சல்', 'கால்பேக்', 'வாய்ஸ்மெயில்' எனும் மூன்று தெரிவுகள் தோன்றும்.

முன்னதாக, குறிப்பிட்ட எண்ணை நாம் மீண்டும் அழைக்க விரும்பினால் மறுபடியும் 'கான் டாக்ட்' பட்டியலுக்குச் சென்று அழைப்பு விடுக்க வேண்டியிருந் தது. இப்போது அந்தச் சிரமம் குறைக்கப்பட்டுள்ளது. ஒரு வாரத்திற்கு முன்னதாக வாட்ஸ்அப் v2.16.179 பதிப்பில் புதிய எழுத்துரு (font) அறிமுகப் படுத்தப்பட்டது. நீங்கள் ஆண்ட்ராய்ட் திறன் பேசியைப் பயன்படுத்துபவர் எனில் வாட்ஸ்அப்பில் எழுத்துருவை மாற்ற நீங்கள் செய்யவேண்டியது எல்லாம் நீங்கள் அனுப்பும் குறுஞ் செய்திக்கு அல்லது குறிப்பிட்ட சொல்லுக்கு முன்னும் பின்னும் ``` எனும் குறியீடுகளைத் தட்ட வேண்டும்.

ஆயினும், தடித்து (Bold), சாய்த்து (Italic) எழுதுவது போன்ற 'டெக்ஸ்ட் ஃபார்மேட்டிங்' அம்சங் களை இந்தப் புதிய எழுத்துரு வசதியுடன் இணைத்துப் பயன் படுத்த முடியாது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!