பெய்ஜிங்: விவசாய பொருட்கள், இறைச்சி, சோயா, கச்சா எண்ணெய் உள்ளிட்ட அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் 696 பொருட்களுக்கு வரி விலக்கு அளிக்க முடிவு செய்துள்ளதாக சீனா தெரிவித்துள்ளது.
சில மருத்துவ சாதனங்கள், பழைய செம்பு, அலுமினியத்திற்கும் வரி விலக்கு அளிக்கப்படுகிறது.
அமெரிக்காவுடன் முதற்கட்ட வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு, சீனா மூன்றாவது முறையாக அமெரிக்கப் பொருட்களுக்கு வரி விலக்கு அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த ஒப்பந்தத்தின்படி அமெரிக்கப் பொருட்களை வாங்குவதை ஈராண்டுகளில் 200 பில்லியனாக அதிகரிக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது.
கொவிட்-19 கிருமித் தொற்று காரணமாக சீனாவால் இந்த இலக்கை எட்ட முடியுமா என்ற கேள்வியையும் நிதி ஆலோசகர்கள் தற்போது எழுப்பியுள்ளனர்.