‘சிங்கே 2016’=ல் பங்கேற்க பார்வையாளர்களுக்கும் வாய்ப்பு

'சிங்கே' அணி­வ­குப்­பை 'எஃப்1' கார் பந்தய வளாகக் கட்­டடத்­தில் பார்க்கும் பார்வையாளர்களும் முதன்­முறை­யா­க அணிவகுப்பில் கலந்­து­கொள்ள முடியும். இவ்வளாகத்தில் அடுத்த மாதம் 19, 20 தேதி­களில் நடை­பெ­ற­வி­ருக்­கும் 'சிங்கே' அணி­வ­குப்­பின் தொடக்க, இறுதிப் பாகங்களில் ஒவ்வொரு நாளும் சுமார் 25,0-00 பார்வை­யா­ளர்­களி­டம் பிரத்­தி­யே­க­மா­கச் செய்­யப்­பட்ட விளக்­கு­கள் அளிக்­கப்­ப­ட­வுள்­ளன. 'சிங்கே 2016' குழுவின் தலைவர் நா ஜுவே ஹிங் இந்தத் தக­வல்­களை வெளி­யிட்­டார். சுமார் 160,000 பார்வை­யா­ளர்­கள் அணி­வ­குப்பைக் காண்பர் என எதிர்­பார்க்­கப்­ படு­கிறது.

66 மீட்டர் நீள­முள்ள விளக்­கு­களு­டன் கூடிய கடல்­நா­கம் காற்றில் பறக்­க­வி­டப்­பட இருப்­பது நிகழ்ச்சியின் சிறப்­பம்­சம். சுமார் 8,000 'லேன்­டர்ன்' விளக்­கு­கள் இவ்­வாண்­டின் அணி­வ­குப்பை பிர­கா­ச­மாக்க உள்­ள­தாக மக்கள் கழகம் குறிப்­பிட்­டது. 30க்கும் மேற்­பட்ட சமய அமைப்­பு­கள் இணைந்து படைக்­கும் அங்கம் ஒன்று இவ்­வாண்டு முதன்­முறை­யாக இடம்­பெ­ற­வுள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!