போட்டி மனப்பான்மையில் இருந்து நாம் மாற வேண்டும் - அமலா பால் அறிவுரை

கொரோனா கிரு­மித்­தொற்­றில் இருந்து மக்­க­ளைப் பாது­காக்க வேண்­டும் என்­ப­தற்­கா­கவே மத்­திய, மாநில அர­சு­கள் ஊர­டங்கை அமல்­ப­டுத்தி இருப்­ப­தா­கக் கூறு­கி­றார் அமலா பால்.

இந்த ஊர­டங்கு வேளை­யில் புதி­தாக எதை­யும் கற்­றுக்­கொள்ள முடி­ய­வில்லை என்று புலம்­பவோ வருத்­தப்­ப­டவோ வேண்­டாம் என்­றும் தமது சமூக வலைத்­த­ளப் பதிவு ஒன்­றில் அவர் குறிப்­பிட்­டுள்­ளார்.

வாழ்க்கை என்­றாலே போட்டி, பந்­த­யம் என்று நினைக்­கும் மனோ­பா­வத்­தில் இருந்து அனை­வ­ரும் மாற­வேண்­டும் என்று குறிப்­பிட்­டுள்ள அவர், பிர­ஷர் குக்­கர் வாழ்க்­கை­யில் இருந்து வெளியே வாருங்­கள் என்று மன அழுத்­தம் குறித்­தும் தன் கருத்­தைப் பதிவு செய்­துள்­ளார்.

“இந்த ஊர­டங்கு காலத்­தில் புதி­தாக எதை­யும் கற்­றுக்­கொள்­ள­வில்லை என்றோ, புத்­த­கங்­க­ளைப் படிக்­க­வில்லை என்றோ வருத்­தப்­பட வேண்­டாம். இது கற்­றுக்­கொள்­வ­தற்­கான நேரமோ அல்­லது உற்­பத்­தி­யைப் பெருக்­கு­வ­தற்­கான நேரமோ அல்ல.

“எனவே அமை­தி­யாக இருங்­கள். ஒரு­வர் செய்­வதை நாமும் செய்­ய­வேண்­டும் என்­கிற அவ­சி­யம் இல்லை. மேலும் அப்­ப­டிப்­பட்­ட­வர்­க­ளின் பின்­னால் ஓட­வேண்­டிய தேவை­யும் இல்லை,” என்­கி­றார் அம­லா­பால்.

இவர் இவ்­வாறு அர­சுக்கு ஆத­ரவு தெரி­வித்­துள்ள நிலை­யில், நடிகை லட்­சுமி ராய், புலம்­பெ­யர் தொழி­லா­ளர்­க­ளின் பரி­தாப நிலை குறித்து கவ­லையை வெளிப்­ப­டுத்தி உள்­ளார்.

கொரோனா கிரு­மித்­தொற்று என்­பது இயற்­கை­யின் கோபம் என­வும் வர்­ணித்­துள்­ளார்.

“கட­வுள்­தான் உல­கைக் காப்­பாற்ற வேண்­டும். இனி இதை­யெல்­லாம் பார்க்க முடி­யாது.

“புலம்­பெ­யர் தொழி­லா­ளர்­க­ளுக்கு உதவி செய்து அவர்­க­ளைக் காப்­பாற்­று­வோம்.

“இந்­தக் கடு­மை­யான கால­மும் நம்­மை­விட்­டுக் கடந்து போகும். விரை­வில் நல்ல காலம் பிறக்­கும் என்று நம்­பு­வோம்” என்று லட்­சுமி ராய் தமது சமூக வலைத்­த­ளப் பதி­வில் குறிப்­பிட்­டுள்­ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!