வேலையிடப் பாதுகாப்பு பரிந்துரைகளை ஏற்ற அரசு

வேலையிடப் பாதுகாப்பு, சுகா தாரத்துக்கான அனைத்துலக ஆலோசனைக் குழு முன்வைத்த பரிந்துரைகளை அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது. அனைத்துலக ஆலோசனைக் குழுவின் ஐந்தாவது கூட்டம் சன்டெக் மாநாட்டு மையத்தில் கடந்த 23ஆம் தேதி தொடங்கி நேற்று நிறைவடைந்தது. கூட்டத்தின்போது வேலை யிடப் பாதுகாப்பு, சுகாதார மன்றம், கழகம் மற்றும் முக்கிய துறைத் தலைவர்களுடன் வேலையிடப் பாதுகாப்பு, சுகா தாரம் தொடர்பில் சிங்கப்பூரின் ஒட்டுமொத்த செயல்பாடு குறித்து ஆலோசனைக் குழு கலந்துரையாடியது.

வேலையிடப் பாதுகாப்பு, சுகா தாரம் தொடர்பாக வகுக்கப் பட்டிருக்கும் 2018ஆம் ஆண்டிற்கான இலக்குகளை அடைய எடுக்கப்படவேண்டிய நடவடிக் கைகள் குறித்தும் கலந்துரை யாடப்பட்டது. அனைத்துலக ஆலோசனைக் குழு அதனைத் தொடர்ந்து பரிந்துரைகளை முன்வைத்தது.

அவையாவன:

••கட்டுமான துறையின் விநியோகச் சந்தையின் உதவி யுடன் வேலையிடப் பாதுகாப்பு, சுகாதாரத் தரத்தை உயர்த்துவது.

•பணியிடத்தில் வேலையிடப் பாதுகாப்பு, சுகாதாரத்தை மேம் படுத்த அதுகுறித்து மேற்பார்வை யாளர்களின் ஆற்றலை உயர்த்துதல்.

*இலேசான காயங்கள் ஏற் படும்போது அவற்றைப் படிப் பினைகளாகக் கொள்வது.

*இயக்குநர் சபையைச் சேர்ந்தவர்களும் பாதுகாப்பு, சுகாதாரம் தொடர்பில் ஈடுபாடு காட்டுதல்.

*சட்டப்படி உள்ள தேவை களையும் தாண்டி ஊழியர்கள் மத்தியில் பாதுகாப்பு, சுகாதாரம் குறித்த ஆற்றலை உயர்த்துதல்.

*மூப்படையும் ஊழியரணி போன்ற சவால்களை சமாளித்தல்.

*காயத் தடுப்பு நடவடிக்கை களை வலுப்படுத்துதல்.

*பாதுகாப்புக்கும் சுகாதாரத் துக்கும் சம முக்கியத்துவம் வழங்குதல்.

*ஒரு துறையில் தங்களுக்கும் பங்கை மேம்படுத்தும் வகையில் திட்டங்களுக்கு ஊக்குவித்தல்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!