சானியா இணைக்கு ‘ஹாட்ரிக்’ பட்டம்

மெல்பர்ன்: டென்னிஸ் விளையாட் டில் மகளிர் இரட்டையர் ஆட்டங் களில் ஆதிக்க சக்தியாகத் திகழ்ந்து வரும் இந்தியாவின் சானியா மிர்சா - சுவிட்சர்லாந்தின் மார்ட்டினா ஹிங்கிஸ் இணை, இவ்வாண்டின் முதல் கிராண்ட் ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலி யப் பொது விருதிலும் வாகை சூடியது. கடந்த ஆண்டு விம்பிள்டன், அமெரிக்கப் பொது விருதுப் பட்டங்களைக் கைப்பற்றியிருந்த சானியா=ஹிங்கிஸ் இணைக்கு இது 'ஹாட்ரிக்' கிராண்ட் ஸ்லாம் பட்டமாக அமைந்தது. நேற்று நடந்த இறுதிப் போட் டியில் ஆண்ட்ரியா ஹிலவக்கோவா -லூசி ஹிரடெக்கா இணையை 7-6, 6-3 என்ற செட்களில் வீழ்த் தியது 'சான்டினா' என அழைக்கப் படும் சானியா- ஹிங்கிஸ் இணை. தொடர்ந்து 36 ஆட்டங்களாகத் தோல்வியையே அறியாத சானியா இணை, தான் பங்கேற்ற கடைசி எட்டுத் தொடர்களிலும் கிண்ணம் வென்றுள்ளது. ஒட்டுமொத்தமாக, இந்த இணைக்கு இது 12வது பட்டம்.

"என்னைப் பொறுத்தமட்டில் ஆஸ்திரேலியப் பொது விருது மிகச் சிறப்பான ஒன்று. இங்கு விளையாடும்போது என் தாய் நாட்டில் ஆடுவதைப் போன்று உணர்கிறேன். ஹிங்கிஸ் ஓர் அற்புதமான பெண். அவருடன் சேர்ந்து விளையாடுவதும் மிக மகிழ்ச்சியான விஷயம்," என்றார் சானியா. ஆயினும், மாலையில் நடந்த கலப்பு இரட்டையர் அரையிறுதி ஆட்டத்தில் சானியா- இவான் டோடிக் (குரோயே‌ஷியா) இணை, எலினா வெஸ்னினா (ரஷ்யா) - புரூனோ சோரஸ் (பிரேசில்) இணை யிடம் 7-5, 7-6 எனத் தோற்று வெளியேறியது.

வெற்றிக் கிண்ணத்துடன் ரசிகர்களுக்கு உற்சாகமாகக் காட்சி தரும் சானியா மிர்சா - மார்ட்டினா ஹிங்கிஸ் இணை. படம்: ஏஎஃப்பி

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!