வேலை இட காயங்கள் கால்வாசி குறைவு

ஏப்ரல் முதல் ஜூன் வரை வேலைகள் நடைபெறாதது காரணமாக இருக்கலாம்; ஆனாலும் 2020 முதல் பாதியில் 16 வேலையிட மரணங்கள்

சிங்­கப்­பூ­ரில் கொவிட்-19 கார­ண­மாக பல வேலை இடங்­கள் கடந்த ஏப்­ரல் முதல் ஜூன் வரை முடங்­கிப் போய் இருந்­தன. இதன் கார­ண­மாக இந்த ஆண்­டி­ன் முதல் பாதி­யில் வேலை இட காயங்­கள் ஏறக்­ குறைய கால்­வாசி குறைந்திருக்­கின்­றன. பல விபத்­து­க­ளி­லும் பாத­க­மான சம்­ப­வங்­க­ளி­லும் சிக்கி காயம் அடைந்­த­வர்­கள் எண்­ணிக்கை சென்ற ஆண்­டின் முதல் பாதி­யில் 6,630 ஆக இருந்­தது.

இது, இந்த ஆண்­டில் ஜன­வரி முதல் ஜூன் வரையிலான ஆறு மாத காலத்­தில் 4,996 ஆகக் குறைந்­தது என்­பது மனி­த­வள அமைச்­சும் வேலை­யிட பாது­காப்பு மற்­றும் சுகா­தார மன்­ற­மும் நேற்று வெளி­யிட்ட புள்ளிவிவ­ரங்­கள் மூலம் தெரி­கிறது. இருந்­தா­லும் இந்த ஆண்­டில் 16 வேலை­யிட மர­ணங்­கள் நிகழ்ந்­துள்­ளன என்பதை அதி­கா­ரி­கள் சுட்­டிக்காட்டி உள்ளனர்.

இந்த எண்­ணிக்கை ஏறக்­கு­றைய சென்ற ஆண்­டின் முதல் அரை­யாண்டு எண்­ணிக்கை (17) அள­வுக்கு இருக்­கிறது என்­பது இதில் கவ­னிக்­கத்­தக்­கது. 2019 முழு­வ­தும் 22 வேலை­யிட மரண சம்­ப­வங்­கள் நிகழ்ந்­தன. மேலி­ருந்து கீழே விழுந்­து­வி­டு­வது, வேலையிட வாக­னங்­கள் தொடர்­பான விபத்­து­களே மர­ணங்­க­ளுக்கு முக்­கிய கார­ணங்­க­ளாக தொடர்ந்து இருந்து வரு­கின்­றன.

ஊழி­யர்­கள் இலே­சாக, கடு­மையாக காயம் அடைந்­த­தற்­குத் தடு­மாறி விழுந்­தது, வழுக்கி விழுந்­தது, மேலி­ருந்து விழுந்­தது ஆகி­ய­வையே முக்­கிய கார­ணங்­கள். என்­றா­லும் இத்­த­கைய சம்­ப­வங்­கள் சென்ற ஆண்­டின் முதல் பாதியைவிட (1,862) இந்த ஆண்­டில் குறைந்­தன (1,508).

இயந்­தி­ரங்­களில் அடி­ப­டு­வது இரண்­டா­வது முக்­கிய கார­ணம். இத்­த­கைய 809 சம்­ப­வங்­கள் இந்த ஆண்­டில் நிகழ்ந்­தன. இந்த ஆண்­டின் முதல் பாதி­யில் போக்கு ­வ­ரத்து மற்றும் பாது­காப்­புப் பெட்­ட­கத் தொழில்­து­றை­யைச் சேர்ந்த வேலை இடங்­களில்­தான் ஆக அதி­க­மாக ஐந்து உயிர்ப் பலி விபத்­து­கள் நிகழ்ந்­தன.

சென்ற ஆண்­டின் முதல் பாதி­யில் 6 ஆக இருந்த கட்­டு­மா­னத் தொழில் துறை மர­ணங்­கள் எண்­ணிக்கை இந்த ஆண்­டில் 3 ஆகக் குறைந்­தன. இந்­தத் துறை­யில் கடு­மை­யாக காயம் ஏற்­பட்ட சம்­ப­வங்­கள் 26. உற்­பத்­தித்­து­றை­யில் 3 மர­ணச் சம்­ப­வங்­கள் நிகழ்ந்­தன. இந்­தத் துறை­யில்­தான் 40 கடு­மை­யான, 971 இலே­சான காயங்­கள் ஏற்­பட்ட சம்­ப­வங்­கள் நிகழ்ந்தன. தீ, பாரம் தூக்கி வாக­னம் சம்­பந்­தப்­பட்ட 4 மரணச் சம்­ப­வங்­கள் இடம்பெற்­றன. வேலை­யிட நோய்­களுக்கு ஆளா­ன­வர்­கள் எண்­ணிக்கை கால்­வாசி குறைந்து 264 ஆக இருந்­தது.

இத­னி­டையே, வேலை­களைப் பாது­காப்பு மிக்க ஏற்­பா­டு­க­ளு­டன் மறு­ப­டி­யும் தொடங்க தோதாக தான் தொழில்­து­றை­க­ளு­டன் தொடர்பு கொண்டு வரு­வ­தாக இந்த மன்றம் தெரி­வித்­துள்­ளது. இந்த ஆண்­டின் கடை­சிக் காலாண்டு முதல் நிறு­வ­னங்­க­ளின் பாது­காப்பு மற்­றும் சுகா­தா­ரச் செயல்­தி­றன் வெளி­யி­டப்­படும். பாது­காப்­பில் தவ­றும் குத்­த­கை­தாரர்­க­ளுக்கு அர­சாங்க குத்­த­கை­கள் கிடைக்­காது.

ஊழியர்களுக்கு மருத்துவ விடுப்பு அல்லது இலேசான வேலைகளைக் கொடுக்க காரணமாக இருக்கும் வேலை இட விபத்துகள் அனைத்தையும் பற்றி முதலாளிகள் செப்டம்பர் 1 முதல் தெரிவிக்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!