கருத்துகளை மீட்டுக்கொள்ள வழக்கறிஞர் ரவிக்கு உத்தரவு

சிங்­கப்­பூ­ருக்­குள் போதைப்­பொருள் கடத்­திய குற்­றத்­திற்­காக கோபி ஆத­வன் என்­ப­வ­ருக்கு மரண தண்­டனை விதிக்­கப்­பட்­டது. மேல்­மு­றை­யீடு செய்­யப்­பட்­டதை அடுத்து தண்­டனை குறைக்­கப்­பட்டு கோபிக்கு சிறைத் தண்­ட­னை­யும் பிரம்­ப­டி­களும் விதிக்­கப்­பட்­டன.

இதன் தொடர்­பில் கோபி­யின் வழக்­க­றி­ஞர் எம்.ரவி ‘தி ஆன்­லைன் சிட்­டி­சன்’ செய்­தித் தளத்­திற்கு அளித்­தி­ருந்த காணொ­ளிப் பேட்­டி­யில் பேசி­யி­ருந்­தார். அதில் அவர் கூறிய கருத்­து­களை மீட்­டுக்­கொண்டு, மன்­னிப்பு கோரு­மாறு அர­சாங்­கத் தலை­மைச் சட்ட அலு­வ­ல­கம் (ஏஜிசி) திரு ரவிக்கு உரி­மைக்­கோ­ரிக்கை கடி­தம் அளித்­துள்­ளது. கோபி மீதுள்ள குற்­றச்­சாட்டை நிரூ­ப­ண­மாக்க வேண்­டும் என்­ப­தில் அரசு வழக்­க­றி­ஞர் குறி­யாக இருந்­தார் என்­றும் அதுவே மரண தண்­டனை விதிக்­கப்­பட்­ட­தற்கு இட்­டுச் சென்­றது என்­றும் திரு ரவி பேட்­டி­யில் குறிப்­பிட்­டி­ருந்­தார். அத்­து­டன் அர­சாங்க வழக்­க­றி­ஞர் உட்­பட சிலர் கோபி­யி­டம் மன்­னிப்பு கேட்க வேண்­டும் என்­றும் அவர் கூறி­னார்.

ஆதா­ர­மில்­லா­மல் இக்­க­டு­மை­யான குற்­றச்­சாட்­டு­களை திரு ரவி கூறு­கி­றார் என்று தெரி­வித்த ஏஜிசி, இதன் தொடர்­பில் திரு ரவி பதி­ல­ளிக்க நாளை வரை அவ­கா­ச­மும் கொடுத்­துள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!