வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் பதவிக்கான ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஹில்லரி கிளிண்டன் வெளியுறவு அமைச்சகப் பணியிலிருந்து விலகி அதிபர் வேட்பாளராக உருவெடுப்பதற்கு இடைப்பட்ட காலத்தில் ஆற்றிய மூன்று உரைகளை விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ளது. அதிபர் தேர்தல் வாக்கெடுப்பு நெருங்கிவரும் இவ்வேளையில் அமெரிக்கப் பங்குச்சந்தையின் மூன்று பெரிய நிறுவனங்களுடனான அவரது நட்புறவைக் காட்டும் அவ்வுரைகள் வெளியாகி அவருக்கு சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளன. பிரசாரக் குழுத் தலைவரான ஜான் போடெஸ்டாவின் மின்னஞ்சல்களிலிருந்து பல ஆவ ணங்கள் 'விக்கிலீக்'ஸால் களவாடப்பட்டது பற்றி திருமதி ஹில்லரி உரையாடியிருந்தார்.
அந்தக் களவாடலுக்கு ரஷ்ய அரசாங்கத்தைக் குறைகூறி யிருந்தது ஹில்லரியின் பிரசாரக் குழு. அமெரிக்க அரசாங்கமும் இதே கருத்தைத் தெரிவித் திருந்தது. நிதிச் சட்டதிட்டங்கள், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினுடனான உறவுமுறை, அமெரிக்க வெளியுறவுக் கொள்கைகள் பற்றி விக்கிலீக்ஸின் முந்தைய வெளியீடுகளால் ஏற்பட்ட மோசமான விளைவுகள் ஆகியவற்றைக் குறிப்பதாக திருமதி ஹில்லரியின் அந்த உரைகள் இருந்தன. இவற்றின் தொடர்பில் பொதுமக்களிடம் அவர் பகிர்ந்துகொண்ட கருத்துகளிலிருந்து விக்கிலீக்ஸ் வெளியிட்ட உரையில் குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் இல்லை.
2013 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் அவர் கோல்ட்மென் சாக்சிற்காக ஆற்றிய உரையில், 'அரசியல் காரணங்களுக்காக' பங்குச்சந்தை வர்த்தகத்தை மேம் படுத்த ஏதாவது செய்தாக வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். இந்த உரைகளுக்காக கோல்ட்மென் சாக்ஸ் நிறுவனம் திருமதி கிளிண்டனுக்கு ஊதியம் வழங்கியிருந்தது. தமக்கு ஊதியம் அளித்த நிறுவனங்களை ஹில்லரியால் நெறிப்படுத்த இயலாது என ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த செனட்டர் பெர்னி சாண்டர்ஸ் முன்பு ஹில்லரிக்கு எதிராக பிரசாரம் செய்துவந்தார்.