சீனாவில் கடும் பனிப்பொழிவு: சுமார் 100,000 ரயில் பயணிகள் தவிப்பு

பெய்ஜிங்: சீனாவில் தற்போது குளிர்காலம். வழக்கத்தைவிட இந்த ஆண்டு கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது. இதனால் அங்கு ரயில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. ரயில்கள் புறப்படுவதிலும் வந்து சேர்வதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது. சீனப் புத்தாண்டினைக் கொண்டாட தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பும் ஆயிரக் கணக்கான மக்கள் ரயில் நிலையங்களில் தவிக்க நேர்ந்துள்ளது. சீனாவின் வடக்கு, தெற்கு, கிழக்கு மற்றும் மத்தியப் பகுதிகளில் கடும் பனி கொட்டுவதால் குவாங்டோங் மாநிலத் திற்குச் செல்லும் பல ரயில்களின் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. குவாங்ஸே„ நகரில் உள்ள இரு ரயில் நிலையங்களில் கிட்டத்தட்ட 100,000 பயணிகள் தவிக்க நேர்ந்துள்ளதாக போலிசார் கூறினர்.

சீனப் புத்தாண்டு சமயத்தில் வழக்கமாக பேருந்துகளிலும் ரயில்களிலும் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். அதிலும் ஏராளமானோர் ரயில் பயணத்தையே விரும்புவர். ரயில் நிலையங்களில் மக்கள் கூட்ட நெரிசலை சமாளிக்க பாதுகாப்பு போலிசார் அமர்த்தப்பட்டுள்ளனர். மத்திய, கிழக்கு மாநிலங்களில் பனிப் பொழிவின் தாக்கம் அதிகமாக இருப்பதால் முக்கிய இரு நகரங்களிலிருந்து புறப்பட்ட 27 ரயில்கள் தாமதமாகப் புறப்பட்டன.

சீனாவில் கடும் பனி கொட்டுவதால் ரயில் சேவைகள் தாமதம் அடைந்துள்ளன. இதனால் குவாங்ஸே„ நகரில் உள்ள ரயில் நிலையத்தில் தவிக்கும் ஆயிரக்கணக்கான பயணிகள். படம்: ராய்ட்டர்ஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!