கோடம்பாக்கத்தில் மோதல்

தமிழ்த் திரை­யு­ல­கில் மீண்­டும் ஒரு வேலை­நி­றுத்த அறி­விப்பு வரு­வ­தற்­கான வாய்ப்பு இருப்­ப­தாக சொல்­கி­றார்­கள் கோடம்­பாக்­கத்து விவ­ரப்­புள்­ளி­கள்.

இந்த ஆபத்­தைத் தவிர்க்க வேண்­டு­மென்­றால், திரை­யு­ல­கம் சார்ந்த அனைத்து சங்­கங்­க­ளின் பிரதி­நி­தி­களும் அமர்ந்து பேசி பிரச்­சி­னை­க­ளைத் தீர்க்­க­வேண்­டும் என்று அவர்­கள் வலி­யு­றுத்தி உள்­ள­னர்.

திரைப்­ப­டங்­களை நேர­டி­யாக வெளி­யி­டு­வ­து­தான் தற்­போது சிக்­கலை ஏற்­ப­டுத்தி உள்­ளது. திரை­ய­ரங்க உரி­மை­யா­ளர்­கள் இதற்கு கடும் எதி­ரிப்­புத் தெரி­வித்து வரு­கி­றார்­கள்.

கொரோனா ஊர­டங்கு முடி­வுக்கு வந்­துள்ள நிலை­யில் தமி­ழ­கம் முழு­வ­தும் மீண்­டும் திரை­ய­ரங்­கு­கள் இயங்­கத் தொடங்கி உள்­ளன. மேலும், திரை­ய­ரங்­கில் உள்ள அனைத்து இருக்­கை­க­ளை­யும் நிரப்பு ­வ­தற்­கும் தமி­ழக அரசு அனு­மதி அளித்­துள்­ளது.

இது திரை­யு­ல­கத்­தி­னர் மத்­தி­யில் மகிழ்ச்­சியை ஏற்­ப­டுத்­திய போதி­லும் அடுத்­த­டுத்த சிக்­கல்­கள் உரு­வாகி உள்­ளது.

கொரோனா ஊர­டங்­கின்­போது சில படங்­கள் 'ஓடிடி' எனப்­படும் நேர­டி­யாக இணை­யத்­தில் வெளி­யி­டும் ஏற்­பாட்­டின்­படி வெளி­யா­கின. இதற்­கான முதல் அடியை எடுத்து வைத்­த­வர் நடி­கர் சூர்யா. அவர் நடித்த 'சூர­ரைப் போற்று' திரைப்­ப­டம் இணை­யத்­தில் வெளி­யாகி நல்ல வசூ­லைத் தந்­தது. இத­னால் மேலும் பல தயா­ரிப்­பா­ளர்கள் மிகுந்த நம்­பிக்­கை­யு­டன் ஓடி­டி­யில் திரைப்­ப­டங்­களை வெளி­யிட்­ட­னர்.

ஏற்­கெ­னவே பட­மாக்­கப்­பட்டு பல பிரச்­சி­னை­களால் முடங்­கிக் கிடந்த படங்­கள், குறைந்த செ­ல­வில் எடுக்­கப்­பட்ட படங்­கள், புது­மு­கங்­கள் நடித்த படங்­கள் ஆகி­ய­வற்றை வெளி­யி­ட­வும் 'ஓடிடி' தளங்­கள் கைகொ­டுத்­தன. இத­னால் இளம் படைப்­பா­ளி­க­ளின் பார்வை 'ஓடிடி' பக்­கம் திரும்­பி­யுள்­ளது. அதா­வது ஒரு படத்தை திரை­ய­ரங்­கில் மட்­டு­மல்­லா­மல், சூட்­டோடு சூடாக இணை­யத்­தி­லும் வெளி­யிட வேண்­டும் என விரும்பு ­கி­றார்­கள். இது­தான் திரை­ய­ரங்க உரி­மை­யா­ளர்­ க­ளுக்­குச் சிக்­கலை ஏற்­ப­டுத்தி உள்­ளது.

திரை­ய­ரங்­கு­களில் படத்தை வெளி­யிட்ட 30 நாட்­க­ளுக்­குள் இணை­யத்­தி­லும் ஒரு படத்தை வெளி­யிட்­டால் அது தங்­க­ளது வரு­மா­னத்­தைப் பாதிக்­கும் என்­பது திரை­ய­ரங்க உரி­மை­யா­ளர்­க­ளின் புகார். எனவே, எந்­த­வொரு படத்­தை­யும் திரை­ய­ரங்­கு­களில் வெளி­யி­டும் முன்பு, அப்­ப­டம் வெளி­யான 30 நாட்­க­ளுக்கு 'ஓடிடி'யில் வெளி­யிட மாட்­டோம் என்று தயா­ரிப்­பாளர்­கள் கடி­தம் கொடுக்­க ­வேண்­டும் என அவர்­கள் வலி­யு­றுத்தி வரு­கின்­ற­னர். ஆனால், தயா­ரிப்­பா­ளர்கள் தரப்­பில் இதற்கு எதிர்ப்­புக் கிளம்பி உள்­ளது.

அண்­மை­யில் விஜய் நடித்த 'மாஸ்­டர்' திரைப்­ப­டம் பல மாத காத்­தி­ருப்­புக்­குப் பின்­னர் திரை­ய­ரங்­கு­களில் வெளி­யாகி நல்ல வசூ­லைக் கண்­டது. எனி­னும் திரை­ய­ரங்­கு­கள் தரப்­பில் காட்­டப்­பட்ட வசூல் கணக்­கால் பிரச்­சினை வெடித்­தது.

திரை­ய­ரங்­கு­களில் 50 விழுக்­காடு இருக்­கை­களை மட்­டுமே நிரப்­ப­லாம் எனும் விதி­முறை அம­லில் இருந்­த­போது 'மாஸ்­டர்' வெளி­யீடு கண்­டது. ஆனால் பல இடங்­களில் அதற்­கும் மேலான இருக்­கை­கள் நிரப்­பப்­பட்­ட­தா­க­வும் கூடு­தல் விலைக்கு டிக்­கெட்­டு­கள் விற்­கப்­பட்­ட­தா­க­வும் கூறப்­பட்­டது.

இத­னால் உண்­மை­யான வசூல் நில­வ­ரத்தை திரை­ய­ரங்­கு­கள் தரப்­பில் முன்­வைக்­க­வில்லை என்­பது தயா­ரிப்­புத் தரப்­பின் குற்­றச்­சாட்­டாக இருந்­தது.

இந்­நி­லை­யில், தயா­ரிப்­பா­ளர்­களும் திரை­யங்க உரி­மை­யா­ளர்­களும் அண்­மை­யில் சந்­தித்­துப் பேசி­னர். எனி­னும் சுமூக உடன்­பாடு எட்­டப்­ப­ட­வில்லை. மார்ச் 31ஆம் தேதிக்­குள் தங்­க­ளது கோரிக்­கை­க­ளை­யும் நிபந்­த­னை­க­ளை­யும் தயா­ரிப்­பா­ளர்­கள் ஏற்­க­வேண்­டும் என திரை­ய­ரங்க உரி­மை­யா­ளர்­கள் கெடு விதித்­தி­ருப்­ப­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

அதற்­குள் சுமூக முடிவு எட்­டப்­ப­ட­வில்லை என்­றால் திரை­ய­ரங்­கு­களில் புதுப்­ப­டங்­களை வெளி­யி­டு­வ­தில் சிக்­கல் ஏற்­படும். திரை­ய­ரங்க உரி­மை­யா­ளர்­கள் வேலை­நிறுத்­தப் போராட்­டத்­தில் ஈடு­ப­டப் போவ­தா­க­வும் ஒரு தக­வல் வெளி­யாகி உள்­ளது. இத­னால் மற்ற திரை­யு­ல­கச் சங்­கங்­களும் போராட்­டம், வேலை நிறுத்­தம் என அழைப்பு விடுக்­கக் கூடும். இத­னால் தமிழ் திரை­யு­ல­கத் தொழி­லா­ளர்­கள் அச்­சத்­தில் உள்­ள­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!