‘தொழிலைச் சொல்லி அவமதிப்பது வேதனை’

ஆசிய சமுதாயத்தில் பலரும் கேட்டறியாத, பார்த்தறியாத, அதிகம் பேசப்படாத, நிழல் போல் வாழும் சமூகங்கள் குறித்து ‘ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ செய்தித்தாள் வாரந்தோறும் வெளியிட்டு வரும் கட்டுரைத் தொடரின் ஒரு பகுதி இது. இந்தியாவில் கழிவுநீர்ப் பகுதி களையும் சாக்கடைகளையும் துப்புரவு செய்யும் ஊழியர்கள் தங்களுக்கு நேரும் அவமானம் குறித்து வேதனை வார்த்தைகளால் விவரிக்கின்றனர். கழிவுகளை சுத்தம் செய்யும் பணிகளில் தாழ்த்தப்பட்ட பிரிவினர் என்று அழைக்கப்படுவோரே பெரும்பாலும் ஈடுபடு கிறார்கள். அவர்களில் சிலர், சமூகம் எவ்வாறு, ஏன் தங்களைப் போன்றோரை ஒதுக்கி வைக்கிறது என்பதை இந்தியாவிலுள்ள செய்தியாளரிடம் விவரித்தனர்.

இந்­தி­யா­வின் பெங்­க­ளூரு நக­ரில் தமது ஈரறை வீட்­டி­லுள்ள படுக்­கை­யில் கால் ேமல் கால் போட்டு ஓய்­வெ­டுத்­துக்ெ­காண்­டி­ருந்த

பெத்­தண்ணா என்­ப­வ­ரின் கைபேசி நான்­கா­வது தட­வை­யாக ஒலித்­தது.

“இன்­னொ­ரு­வ­ரின் கழி­வறை அடைத்­துக்­கொண்­டுள்­ளது,” என்று கூறிய பெத்­தண்ணா, படுக்­கை­யை­விட்டு கீழே இறங்கி, வேலை செய்­யும்­போது அணி­யும் காக்­கிச் சட்டை, முகக்­க­வ­சம் ஆகி­ய­வற்றை அணிந்­துெ­காண்­டார்.

அவர் தங்­கி­யி­ருக்­கும் தெரு­

மு­னையைச் ெசன்­ற­டை­வ­தற்­குள் அவ­ரது கைபேசி மீண்­டும் ஒலித்­தது. கூப்­பிட்­ட­தும் அதே நபர்­தான்.

“பெத்­தண்ணா கிளம்­பி­விட்­டாரா, சீக்­கி­ரம் வர முடி­யுமா, பேருந்­துக்­குக் காத்­தி­ரா­மல் ‘ஆட்ேடா ரிக்‌ஷா’ எடுத்து வர­மு­டி­யுமா,” என்று அவர் கேட்­டார்.

“பணம் படைத்­த­வர்­கள் தங்­க­ளது கழி­வு­நீர்த் தொட்டி தேங்­கிக் கிடக்­கும்­பொ­ழு­து­தான் செய்­வ­த­றி­யாது தவிப்­பார்கள். அப்­போ­தெல்­லாம் அவர்­க­ளுக்கு எனது தேவை மிக­வும் அவ­சி­யம்,” என்று 55 வயது நிறை­வ­டைந்த பெத்­தண்ணா கூறு­கி­றார்.

கைபே­சி­யில் அழைத்­த­வர் தம்மை ‘அண்ணா’ என அழைத்­த­போ­தும் அது வெறும் வாய் வார்த்­தை­தான் என்­பது 20 ஆண்­டு­க­ளாக கழி­

வ­றை­கள், சாக்­க­டை­கள், பாதாள கழி­வு­நீர் போன்­ற­வற்றை சுத்­தம் செய்­து­வ­ரும் பெத்­தண்­ணா­வுக்­குத் தெரி­யா­த­தல்ல.

குழாய்­களில் நல்ல நீர் வர ஆரம்­பித்து, தமது வாடிக்­கை­யா­ளர்­கள் நிம்­ம­திப் பெரு­மூச்சு விட ஆரம்­பித்­த­தும் அவர்­க­ளின் சாதி மனப்­பான்மை அங்கு மேலோங்கி நிற்­கும் என்­கி­றார் இவர்.

“அவர் எனக்கு நியா­ய­மான கூலி கொடுத்­தால் போது­மா­னது,” என்று கூறிய பெத்­தண்ணா, ஆட்ேடா ரிக்‌ஷா ஒன்றை நிறுத்­தும்­படி கைகாட்­டி­ய­து­டன் அந்­தப் பய­ணச்­செ­ல­வை­யும் வாடிக்­கை­யா­ளரே கொடுத்­தால் நன்­றாக இருக்­கும் என்­றார் நம்­பிக்­கை­யு­டன்.

இது­போன்ற வேலை ஒன்­றுக்கு அவர் 1,000 ரூபாய் (சுமார் S$18.30) வரை கூலி கேட்­பார்.

நிரந்­தர வரு­மா­னம் எதுவும் இல்­லாத இவ­ரைப்­போன்ற விருப்­பத் தொழில் புரி­வோ­ருக்கு வரு­மா­னம் என்­றுமே நிச்­ச­ய­மில்­லாத ஒன்­று­தான்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!