புதிதாக 14 பேருக்குத் தொற்று; எல்லாரும் இங்கு வந்தவர்கள்; சமூகத்தில், வெளிநாட்டு ஊழியர் விடுதியில் தொற்று இல்லை

சிங்­கப்­பூ­ரில் நேற்று நண்­ப­கல் நில­வ­ரப்­படி புதி­தாக 14 பேருக்கு கொவிட்-19 தொற்று உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டது. அவர்­க­ளை­யும் சேர்த்து கொரோனா கிரு­மித்­தொற்று கார­ண­மாக பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளின் மொத்த எண்­ணிக்கை 60,692 ஆகக் கூடி­யது. புதி­தாக கிருமி தொற்­றிய அனை­வ­ருமே வெளி நாடு­களில் இருந்து வந்­த­வர்­கள்.

தனி­மை­யில் இருக்க வேண்­டும் என்று அவர்­க­ளுக்கு உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­ட­தாக சுகா­தார அமைச்சு தெரி­வித்­தது.

சமூ­கத்­தி­லும் வெளி­நாட்டு ஊழி­யர் தங்­கு­வி­டு­தி­க­ளி­லும் புதி­தாக நேற்று யாருக்­கும் தொற்று இல்லை என்று தெரிவிக்­கப்­பட்­டது. திங்­கட்­கி­ழமை புதி­தாக கொவிட்-19 தொற்­றுக்கு ஆளா­ன­வர்­கள் எண்­ணிக்கை 25 ஆக இருந்­தது. அவர்­கள் அனை­வ­ருமே வெளி­நா­டு­களில் இருந்து வந்­த­வர்­கள். தனி­மை­யில் இருக்க வேண்­டும் என அவர்களுக்கு உத்­தரவிடப்­பட்­டது.

அவர்­களில் ஒரு­வர், கன­டா­வில் இருந்து இங்கு திரும்பி வந்த 72 வயது மாது. அந்த மாதுக்­கும் இதர நான்கு பேருக்­கும் தொற்று அறிகுறி­கள் காணப்­பட்­ட­தா­க­ அமைச்சு திங்­கட்­கி­ழமை கூறியது.

திங்­கட்­கி­ழமை தொற்று கண்டு­பி­டிக்­கப்­பட்­ட­வர்­களில், அந்த 72 வயது மாது உட்­பட ஐந்து பேர் சிங்­கப்­பூ­ரர்­கள். கனடா, இந்­தியா, இந்­தோ­னீ­சியா, பிரிட்­டன் ஆகிய நாடு­களில் இருந்து அவர்­கள் வந்­தனர்.

பங்­ளா­தேஷ், இந்­தியா, நேப்­பா­ளம் ஆகிய நாடு­க­ளைச் சேர்ந்த நான்கு வேலை அனு­மதி ஊழி­யர்­களும் பங்­ளா­தேஷ், இந்­தியா, பிலிப்­பீன்ஸ் நாடு­க­ளைச் சேர்ந்த வேலை அனு­ம­திச் சீட்டு ஊழி­யர்­கள் 11 பேருக்­கும் தொற்று இருந்­தது தெரியவந்­தது.

இந்­தியா, அமெ­ரிக்­கா­வில் இருந்து குறு­கிய கால விசா­வில் வந்த மூன்று பேரும் அவர்­களில் அடங்­கு­வர். இத­னி­டையே, சமூ­கத்­தில் புதிய தொற்­று­க­ளின் எண்­ணிக்கை தொடர்ந்து நிலை­யாக இருந்து வரு­வ­தாக சுகா­தார அமைச்சு தெரி­வித்­தது.

கடந்த இரண்டு வார கால­மாகவே அந்த எண்­ணிக்கை வாரத்­திற்கு இரண்டு என்ற முறை­யில் இருந்து வரு­கிறது.

சமூ­கத்­தில் ஒன்­றுக்­கொன்று தொடர்பு இல்­லாத தொற்­று­க­ளின் எண்­ணிக்­கை­யும் கடந்த இரண்டு வார­மாக வாரத்­திற்கு இரண்டு என்ற முறை­யில் நிலை­யாக இருந்து வரு­கிறது.

கொவிட்-19 தடுப்பூசி இயக்கம் சிங்கப்பூரில் சரளமாக நடந்து வருகிறது. படிப்படியாக பலருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

வெளிநாட்டு ஊழியர் தங்கு விடுதியிலும் தடுப்பூசி இயக்கம் இடம்பெற்று வருகிறது.

இவ்­வே­ளை­யில், திங்­கட்­கி­ழமை 22 பேர் குண­ம­டைந்து வீடு திரும்­பி­னர். அவர்­க­ளை­யும் சேர்த்து மொத்­தம் 60,342 பேர் முற்­றி­லும் குண­ம­டைந்து இருக்­கி­றார்­கள்.

மருத்­து­வ­ம­னை­யில் இன்­ன­மும் 56 பேர் சிகிச்சை பெற்று வரு­கிறார்­கள். ஒரு­வர் தீவிர கண்­காணிப்­பில் இருந்து வரு­கி­றார். சமூக நல்­வாழ்வு நிலை­யங்­களில் 235 பேர் தேறி வரு­கி­றார்­கள்.

கொவிட்-19 கார­ண­மாக சிங்­கப்­பூ­ரில் 30 பேர் மர­ண­ம­டைந்­து­விட்­ட­னர். அந்­தத் தொற்று இருந்­தும் இதர கார­ணங்­க­ளால் மாண்­ட­வர்­க­ளின் எண்­ணிக்கை 15 என்று தெரி­விக்­கப்­பட்டு உள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!