நைஜீரியாவில் கடத்தப்பட்ட சிங்கப்பூர் கப்பல் விடுவிப்பு

சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட 'சாஃப்மரின் குராமோ' என்ற கொள்கல கப்பல் நைஜீரியா கடற்பகுதியில் கடத்தப்பட்டது. ஆனால் அது பின்னர் விடு விக்கப்பட்டதாக சிங்கப்பூர் கடற் துறை, துறைமுக ஆணையம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது. வெள்ளிக்கிழமை சிங்கப்பூர் நேரப்படி இரவு 8.06 மணி அளவில் அந்தக் கப்பல் கடத்தப் பட்டது. அந்தச் சமயத்தில் காங் கோவின் பாயிண்ட் நொய்ரியி லிருந்து நைஜீரியாவின் போர்ட் ஒன்னை நோக்கி கப்பல் சென்று கொண்டிருந்தது. சனிக்கிழமை விடியற்காலை 1.20 மணிக்கு விடுவிக்கப்பட்ட கப்பலையும் அதிலிருந்த ஊழியர் களையும் நைஜீரிய அதிகாரிகள் மீட்டனர்.

அனைத்து ஊழியர்களும் பாதுகாப்பாக இருப்பதாக நைஜீரிய அதிகாரிகள் கூறினர். அந்தக் கப்பலில் பிலிப்பீன்ஸ், தென் ஆப்பிரிக்கா, இந்தியா, பிரிட்டன், தாய்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த 25 ஊழி யர்கள் இருந்தனர். ஆனால் அவர்களில் சிங்கப்பூரர்கள் யாரும் இல்லை என்று சிங்கப்பூர் கடற்துறை, துறைமுக ஆணையம் குறிப்பிட்டது. 'சாஃப்மரின் குராமோ' கப்பலை 'மேய்ர்ஸ்க் லைன்' நிர்வகித்து வருகிறது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!