ரசிகர்களைக் கவர வருகிறது ‘டார்லிங் 2’

ஒரு படத்தின் அடுத்தடுத்த பாகங்கள் திட்டமிட்டபடி உருவாகி வந்து ரசிகர்களை மகிழ்விப்பது நல்ல விஷயம். அந்த வகையில், சென்ற ஆண்டு வெளியான படங்களில் குறிப்பிடத்தக்க வெற்றிப்படமாக அமைந்தது 'டார்லிங்'. அதன் இரண்டாம் பாகம் தற்போது தயாராகிறது. இதுவரை இல்லாத அளவுக்கு மிக ஏராள மான பொருட்செலவில் உரு வான ஒரு படத்தோடு சேர்ந்து திரைக்கு வந்த 'டார்லிங்' படம் பெரும் வெற்றியைப் பெற்றது என்பதுதான் குறிப்பிடத்தக்க அம்சம். 'டார்லிங்' படத்தைத் தயாரித்த ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தற்போது 'டார்லிங் 2' என்ற படத்தைத் தயாரித்து வருகிறார். 'ஜின்' என்ற பெயரில் உருவாகத் துவங்கிய இப்படம் தற்போது 'டார்லிங் 2' ஆக வெளியாக இருக்கிறது.

'ஜின்' எப்படி 'டார்லிங் 2' ஆனது என்பது குறித்து ஞான வேல் ராஜா கூறும்போது, "ஒரு பெயரோடு தொடர் பட வரிசையில் வரும் இரண்டாவது படம் கதையிலோ நடிகர் நடிகைக ளிலோ முதல் படத்துடன் ஒத்துப் போக வேண்டும் என்பது கட்டா யமில்லை. படத்தின் குணாதிசயத் தன்மை ஒன்றாக இருந்தாலே போதும். "இந்த 'டார்லிங் 2' படத்தை இயக்கி இருப்பது அறிமுக இயக்குநரான சதீஷ் சந்திர சேகரன். ஐந்து நண்பர்கள் பேய் பிடித்த ஒரு நண்பனோடு சேர்ந்து ஒரு பயணம் போகிறர்கள் என்ற ஒற்றை வரியே என்னை மிகவும் கவர்ந்தது. ஒவ்வொரு காட்சியி லும் திகிலோடு நகைச்சுவையும் பின்னிப்பிணைந்து அமைக் கப்பட்ட திரைக்கதை. இது கண்டிப்பாக வெற்றிபெறும். "'மெட்ராஸ்' புகழ் கலைய ரசன், காளி வெங்கட், அர்ஜுன், முனீஸ்காந்த், 'மெட்ராஸ்' ஜானி போன்ற கலைஞர்களின் கூட் டணி இப்படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!