ரூ.50,000 ஓய்வூதியத்திற்கு விண்ணப்பித்த சுரேஷ் ரெய்னா

லக்னோ: இந்தியாவின் முன்னணி பேட்ஸ்மேன் சுரேஷ் ரெய்னா உத்தரப்பிரதேச மாநிலம் மாதந் தோறும் வழங்கும் ஓய்வூதியமாகிய 50,000க்கு விண்ணப்பித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலத்தில் அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. பலதுறைகளில் சிறந்து விளங் குபவர்களுக்கு மாநில அரசு ரூ.5 லட்சத்துடன் 'யாஷ் பாரதி' விருது வழங்கி வருகிறது.

இந்த நிலையில் உ.பி. மாநிலத்தைச் சேர்ந்த இந்த விருது பெற்றவர்களுக்கு மாதம் தோறும் ரூ.50 ஆயிரம் ஓய்வூதியம் வழங்கப்படும் என்று முதல்- அமைச்சர் அகிலேஷ் யாதவ் அறிவித்து இருந்தார். யாஷ் பாரதி விருது பெற்ற 141 பேருக்கும் மாநில கலாசார துறை சார்பில் ஓய்வூதியம் பெறு வதற்கான விண்ணப்பங்கள் அனுப்பப்பட்டன. கடைசி நாளான கடந்த 31ஆம் தேதி வரை 108 பேர் இதற்கு விண்ணப்பித்து இருந்தனர். யாஷ் பாரதி விருது பெற்ற பிரபல இந்தி நடிகர் அமிதாப் பச்சன், அவரது மனைவி ஜெயாபச்சன், மகன் அபிஷேக் ஆகியோர் ஓய்வூதியம் பெற மறுத்து விட்டனர். இந்த விண்ணப்பங்களைப் பரிசீலித்தபோது லட்சக்கணக் கில் பணம் சம்பாதிக்கும் பிரபலங்- களும் விண்ணப்பித்து இருந்தது தெரியவந்தது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!