'பார்டர்' படத்தின் வெளியீட்டுத் தேதியை தள்ளி வைத்துள்ளனர். அறிவழகன் இயக்கி உள்ள அதிரடிப் படம் இது.
அருண் விஜய் நாயகனாகவும் ஸ்டெஃபி படேல் அவரது ஜோடியாகவும் நடித்துள்ளனர். ரெஜினா கஸான்ட்ரா மற்றொரு நாயகியாக தோன்றுவார்.
விஜய் ராகவேந்திரா தயாரித்துள்ள இப்படத்துக்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார்.
கொரோனா இரண்டாவது அலைக்கு முன்பே இப்படத்தை வெளியிடத் திட்டமிட்டிருந்தனர். இந்நிலையில் தொற்றுப் பாதிப்பு அதிகரித்ததால் திரையரங்குகள் மூடப்பட, படவெளியீடு பாதிக்கப்பட்டது. பின்னர் நேரடியாக இணையத்தில் வெளியிடுவது தொடர்பாக சில நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடந்து வந்ததாம்.
இந்நிலையில் தமிழகத்தில் தற்போது தொற்றுப்பரவல் குறையத் தொடங்கி உள்ளது. அநேகமாக ஜூலை மாதத்தில் திரையரங்குகள் திறக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனால் உற்சாகமடைந்துள்ள படக்குழுவினர் திரையரங்குகளில் இப்படத்தை வெளியிடலாம் என தயாரிப்புத் தரப்பிடம் வலியுறுத்தி உள்ளனராம்.
இதை ஏற்று இணையத்தில் வெளியிடும் திட்டத்தைத் தயாரிப்பாளர் கைவிட்டுள்ளாராம். எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் இந்திய சுதந்திர தினத்தையொட்டி இப்படத்தைத் திரையரங்குகளில் வெளியிடப் போவதாகத் தகவல்.