மாரியின் தவிப்புகள் ‘டார்க் லைட்’

இந்து இளங்­கோ­வன்

ஒரு முறை சட்­ட­வி­ரோ­த­மான நடவடிக்­கை­கள் நடக்­கும் சிங்­கப்­பூ­ரில் உள்ள ஒரு பகு­திக்கு சென்றி­ருந்­த­போது அங்கு நிகழ்ந்த சூதாட்­டம், விபசாரம் அவற்றை களைய காவல் அதி­கா­ரிகள் மேற்கொள்ளும் கண்காணிப்பு போன்­ற­வற்றை பார்த்து வியப்­ப­டைந்­தார் 33 வயது குறும்­பட இயக்­கு­நர் செ. விக்­னேஸ்­வ­ரன்.

அவர் பார்த்து வியந்­த­வற்றை மைய­மாகக்கொண்டு ‘டார்க் லைட்’ (Dark Light) எ­னும் ஒரு குறும் ­ப­டமாகத் தயா­ரித்­துள்­ளார்.

இந்தக் குறும்­ப­டம், 7வது தேசிய இளை­யர் திரைப்­பட விரு­து­க­ளுக்கு நிய­ம­னம் செய்­யப்­பட்ட 56 குறும்­படங்­களில் ஒன்­று.

இந்­தி­யா­வில் உள்ள தமது குடும்­பத்­தைக் காப்பாற்ற சிங்­கப்­பூ­ரில் கட்­டு­மான ஊழி­ய­ராகப் பணி­பு­ரி­யும் மாரி என்னும் வெளி­நாட்டு ஊழி­யர் ஒருவர், இரவு நேரத்­தில் விப­சா­ரம் நடக்­கும் ஒரு பகு­திக்குச் செல்கிறார்.

அங்கு ஒரு குழு­வாக சிலர் பகடைக்காயை உருட்டி சூதாட்­டம் விளை­யா­டிக் ­கொண்­டி­ருப்பதைப் பார்க்கிறார். இது அவ­ரின் கவனத்தை ஈர்க்­கிறது. விளை­யாட்டில் தானும் பங்கேற்கிறார்.

சில சுற்­று­களில் வெற்­றி­பெற்­ற­பின் மாரி அங்கிருந்து விடை­பெற ஆயத்­த­மா­கி­றார்.

ஆனால் அவ­ரின் விருப்­பத்தை நிரா­க­ரித்து அவ­ரி­டம் இருந்த பணம் அனைத்­தை­யும் அப­க­ரிக்­கிறது ஒரு குண்­டர் கும்­பல்.

அவர்­களை எதிர்த்துப் போராடும் மாரியை குண்­டர் கும்­பல் மோச­மாகத் தாக்கி காயப்­ப­டுத்­தி­விட்டு அவரிடமிருந்த பணத்தைப் பறித்துக் கொண்டு செல்­கிறது.

இந்­தி­யா­வில் இருக்­கும் தமது குடும்­பத்­திற்கு அனுப்ப கையில் பணம் இல்­லா­ததை நினைத்து மன உளைச்­ச­லுக்கு ஆளா­கும் மாரி, நிலை­மையைச் சமா­ளிக்க எதிர்­பாராத ஒன்றைச் செய்­கி­றார்.

இது­தான் ‘டார்க் லைட்’ குறும்­படத்­தின் சுவா­ர­சி­ய­மான கதை.

விறு­வி­றுப்­பான காட்­சி­கள், கதையோட்டத்துக்கு ஏற்ற ஒளிப்­ ப­திவு, யதார்த்­த­மான நடிப்பு என ‘டார்க் லைட்’ குறும்­ப­டம் பார்ப்­ப­வர்­க­ளின் மனதைக் கொள்ளை கொள்­கிறது.

படத்­தில் மாரி­யாக நடித்­த­வர் தொலைக்­காட்சி நாடக பிர­ப­லம் கொஸ்­டெ­லோவா ஸ்பான்­சர்.

இந்­திய­நாட்டு ஊழி­யர் கதா­பாத்­தி­ரத்­தில் நடிக்க பல வகை­யில் தம்மை தயார்­ப­டுத்­திக்­கொண்­ட­தாக கூறினார் ஸ்பான்­சர்.

வெளி­நாட்டு ஊழி­யர்­களின் நடை, உடை, பாவனைகளைக் கவனித்து அவர்கள் எவ்­வாறு பேசு­வார்­கள், நடந்­து­கொள்­வார்­கள், அவர்­கள் உடல் அசை­வு­கள் போன்­ற­வற்றை கற்­றுக்­கொண்டு மாரி காதா­பாத்­தி­ரத்தை தாம் உரு­வாக்­கி­யதாக ஸ்பான்­சர் தெரிவித்தார்.

‘SCAPE’ ஏற்­பாட்­டில் நடக்­கும் தேசிய இளை­யர் திரைப்­பட விருது­ போட்டிக்கு இந்த ஆண்­டு மொத்­தம் 330 குறும்­ப­டங்­கள் சமர்­பிக்­கப்­பட்­டி­ருந்­தன.

அதில் சிறந்த 56 குறும்­ப­டங்­கள் விரு­து­க­ளுக்கு நிய­ம­னம் பெற்றுள்ளன.

இந்த ஆண்டு பெரும்­பா­லான குறும்­ப­டங்­கள், மனநலம், சுய தேடல், கிருமித்­தொற்று விளை­வித்­தி­ருக்­கும் இந்த கடி­ன­மான கால­கட்­டத்­தில் சவால்­களை எதிர்த்து மக்­கள் எவ்­வாறு வாழ்­கின்­ற­னர் ஆகிய கருப்­பொ­ருள்­களை கொண்டி­ருந்­த­தாகத் தெரி­வித்­தது ஏற்­பாட்­டுக்­குழு.

‘டார்க் லைட்’ படப்­பி­டிப்பு 2020ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் தொடங்­கி­யது. இரண்டு நாட்­கள் படப்­பி­டிப்பு நடந்­த­பின், கிரு­மித்­தொற்று ஏற்படுத்திய சவால்­க­ளால் படப்­பி­டிப்பை இரண்டு மாதங்­களுக்குத் தள்ளிவைக்­க வேண்­டி­யி­ருந்­தது.

நோய்ப் பரவல் முறியடிப்புத் திட்டம் தொடங்­கு­வ­தற்கு சில நாட்­ க­ளுக்கு முன்பு படப்­பி­டிப்பு நிறை­ வ­டைந்­துள்­ளது. அதன் பிறகு படத்­தின் தொகுப்­பாக்­கத்தை வீட்­டி­லி­ருந்­த­ப­டியே செய்து முடித்­தி­ருக்­கின்­ற­து படக்­குழு.

குறும்படத்­தின் இயக்­கு­நரும் நிர்­வாகத் தயா­ரிப்­பா­ள­ருமான செ விக்­னேஸ்­வ­ரன், இந்தக் குறும்­ப­டம் ஏறக்குறைய $15,000 செலவில் உரு­வா­ன­தாகக் கூறி­னார்.

‘கிராப்’ வாடகை கார் ஓட்டி அதி­லி­ருந்து கிடைத்த பணத்தை கொஞ்­சம் கொஞ்­ச­மாகச் சேமித்து படத் தயா­ரிப்­பிற்கு பயன்­ப­டுத்­தி­யுள்­ளார் இந்த இளம் திரைப்பட ஆர்வலர்.

இவரைப் போலவே து­டிப்­பான பல இளம் தமிழ்ப் படத் தயா­ரிப்­பா­ளர்­களும் இயக்­கு­நர்­களும் தொடர்ந்து தங்­க­ளது படைப்­பு களின் வழி ஆற்­றலைப் வெளிப் ­ப­டுத்­தி­ வ­ரு­கின்­ற­னர்.

சிங்­கப்­பூ­ரில் குறும்­ப­டங்­களைத் தயா­ரிக்­கும் இளை­யர்­க­ளின் எண்ணிக்­கை­யும் அவர்­கள் தயா­ரிக்­கும் படங்­க­ளின் தர­மும் தொடர்ந்து முன்­னேற்­றம் கண்டு வருகிறது. அதே நேரத்தில், தாங்கள் தயாரிக்­கும் படங்­க­ளுக்கு சிங்­கப்பூர் மக்களி­ட­மி­ருந்து போதுமான ஆத­ர­வும் வர­வேற்­பும் கிடைப்­ப­து இல்லை என்­பது சில இளம் படத் தயா­ரிப்­பா­ளர்­க­ளின் வருத்தமாக உள்ளது.

தங்­க­ளது படங்­களை வெளி­யிட சிறந்த ஊடகத் தளங்­கள் கிடைப்­பதும் குறும்­படத் தயா­ரிப்­பா­ளர்­கள் சந்­திக்­கும் மற்றொரு முக்­கிய சவால் என்றும் ‘டார்க் லைட்’ படக்குழுவினர் குறிப்பிட்டனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!