தெருவோர வியாபாரிகள் போலிசாருடன் மோதல்

ஹாங்காங்: ஹாங்காங்­கின் மோங்கோக் பகு­தி­யின் கடை வீதியில் சட்­ட­வி­ரோ­த­மா­கக் கடை நடத்­தி­ய­வர்­களை அகற்­றும் முயற்­சி­யில் போலிசார் நேற்று ஈடு­பட்டபோது அங்கே கல­வ­ரம் வெடித்­தது. சில்லறைப் பொருட்கள் விற்கும் தற்காலிகக் கடைகள் நடத்திய கடைக்­கா­ரர்­களுக்கு ஆத­ர­வாக ஆத்­தி­ரத்­தில் அங்கே சேர்ந்த கூட்­டத்தை விலக்க கல­கத் தடுப்பு போலிசார் வான் நோக்கி இரண்டு முறை சுட்­ட­னர்.

உல­கப்­பு­கழ் பெற்ற நாதன் ரோட்டில் நெருப்பு பற்றி எரிந்த குப்பைத் தொட்­டி­கள், செங்கற்­கள், உடைந்த போத்­தல்­கள் இரைந்தன. அங்கே நிறுத்தி வைக்கப் பட்­டி­ருந்த ஒரு டாக்­சி­யின் முன்­பு­றக் கண்ணாடி வெடித்­துச் சித­றி­யது. ஆர்ப்பாட்டக்காரர்கள் செங் கற்களைத் தூக்கி போலிசார் மீது வீசினர். 2014ஆம் ஆண்டில் ஜன நாயகத்துக்கு ஆதரவாக நடந்த ஆர்ப்பாட்டங்களுக்குப் பிறகு நடந்த ஆக மோசமான தெருக் கலவரம் என்று தெரிவித்தப்பட்டது.

ஹாங்காங்­கின் மோங்கோக் பகு­தி­யில் இருக்கும் உலகப் புகழ்பெற்ற நாதன் ரோட்டில் தெருவோரத் தற்காலிகக் கடைகளை அகற்றும் பணியில் போலிசார் ஈடுபட்டபோது ஆத்திரங்கொண்ட கும்பல் ஒன்று அங்கே கூடியது. அதனைச் சமாளிக்க கல­வ­ரத் தடுப்பு போலிசார் வான் நோக்கி இரண்டு முறை சுட்­ட­னர். அப்போது வெடித்த கலவரத்தின்போது போலிசார் மிளகுப் பொடி தூவியும் தடியடி நடத்தியும் ஆர்ப்பாட்டக்காரர்களை விலக்கினர். படம்: ராய்ட்டர்ஸ்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!