மலேசிய நீதிமன்றம்: தாயிடம் மகள், தந்தையிடம் மகன்

புத்ராஜெயா: மலேசியாவில் எஸ். தீபா - இஸ்வான் அப்துல்லா வழக்கில் நேற்றுத் தீர்ப்பளிக்கப் பட்டது. இந்த வழக்கில் எஸ்.தீபாவின் இளைய மகன் நபிலை, வயது 8, பராமரிக்கும் உரிமையை அவரது முன்னாள் கணவரான முஸ்லிம் மதத்துக்கு மாறிய இஸ்வான் அப் துல்லாவுக்கு வழங்கி உத்தர விடப்பட்டது. அதே சமயத்தில் மகள் ஷர்மிளாவை, வயது 11, பராமரிக்கும் உரிமை தாயார் எஸ்.தீபாவுக்கு வழங்கப்பட்டது. நீதிமன்றத்தில் பார்வையாளர் இடத்தில் தனித்தனியாக அமர்ந்திருந்த எழுத்தரான தீபாவும் லாரி ஓட்டுநர் இஸ்வானும் இறுக்கமான முகத்துடன் காணப்பட்டனர்.

முன்னதாக குழந்தைகளைச் சந்தித்துப் பேசிய நீதிமன்றம், பிள் ளைகளின் விருப்பத்தின் அடிப் படையில் தீர்ப்பு வழங்கியதாகத் தெரிவிக்கப்பட்டது. இதில் மேல்முறையீட்டு நீதி மன்றத்தின் தலைவர் முஹம்மட் ராஸ் ஷரீஃப் தலைமையிலான அமர்வு, "இன்-று இரு குழந்தை களிடமும் பேசினோம். சிறுவன் தந்தையிடம் இருக்க விரும்பு வதாகவும் சிறுமி தாயிடம் இருக்க விரும்புவதாகவும் கூறினர்," என்றார். நெகிரி செம்பிலானில் கோலா பில்லா பள்ளியில் நபிலும் ஜோகூர் பாருவில் உள்ள அனைத்துலகப் பள்ளியில் ஷர்மிளாவும் படித்து வருகின்றனர்.

தீர்ப்புக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய எஸ். தீபா (இடம்). வலது படத்தில் அவரது முன்னாள் கணவர் இஸ்வான் அப்துல்லா. படங்கள்: மலேசிய குரோனிக்கல், -தி ஸ்டார் ஆன்லைன்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!