‘அண்மைய நிகழ்வுகளால் சிங்கப்பூர் இனவாதமிக்க நாடு என்றாகிவிடாது’

அண்­மை­யில் நிகழ்ந்த சில சம்­ப­வங்­க­ளால் சிங்­கப்­பூர் இனவா­த­மிக்க நாடா­கி­விட்­டது என்று

கரு­தி­வி­டக்­கூ­டாது என்று கலா­சார, சமூக, இளை­யர் துறை அமைச்­சர் எட்­வின் டோங் தெரி­வித்­துள்­ளார். இருப்­பி­னும், இன நல்­லி­ணக்­கத்தை உறுதி செய்யக் கடந்த பல ஆண்­டு­க­ளாக நடை­

மு­றைப்­ப­டுத்­தப்­பட்டு வரும் கொள்­கை­கள் முழு­மை­யான தீர்­வைத் தரும் என்று மெத்­த­னத்­து­டன் இருந்­து­வி­டக்­கூ­டாது என்­பதை அண்­மைய சம்­ப­வங்­கள் நினை­வுப்­ப­டுத்­து­கின்­றன.

பல்­லின மக்­க­ளி­டை­யி­லான உறவை மேம்­ப­டுத்த தேவை­யான மாற்­றங்­களை அடிக்­கடி செய்ய வேண்­டும் என்­றார் அவர்.

இன நல்­லி­ணக்­கத்தை மேம்­

ப­டுத்­தும் தேசிய அமைப்­பான OnePeople.sg ஏற்­பாட்­டில் நடை­பெற்ற மெய்­நி­கர் இளை­யர்

மாநாட்­டில் திரு டோங் பேசி­னார்.

மாநாட்­டில் 15 வய­துக்­கும் 35 வய­துக்­கும் இடைப்­பட்ட ஏறத்­தாழ 200 இளை­யர்­கள் பங்­கெ­டுத்­த­னர்.

1964ஆம் ஆண்­டில் சிங்­கப்­பூ­ரில் நிகழ்ந்த இனக் கல­வ­ரத்­தில் உயி­ரி­ழப்­பு­கள், சேதங்­கள் ஆகி­யவை ஏற்­பட்­டதை மாநாட்­டில் பங்­கெ­டுத்த இளை­யர்­க­ளு­டன் அமைச்­சர் டோங் பகிர்ந்­து­கொண்­டார்.

கல­வ­ரம் நடந்து பல ஆண்­டு­கள் ஆகி­விட்ட நிலை­யில், நாட்­டில் நில­வும் தற்­போதைய சூழல் முற்­றி­லும் மாறி­விட்­டதை அவர் சுட்­டி­னார். இன ரீதியாக சிங்­கப்­பூ­ரில் நடப்­பில் உள்ள சில கொள்­கை­களை மறு­ஆய்வு செய்ய வேண்­டிய நிலை ஏற்­ப­டக்­கூ­டும் என்­றார் அவர்.

சில நோக்­கங்­க­ளுக்­காக அந்தக் கொள்­கை­கள் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்­ட­போ­தி­லும் காலத்­துக்கு ஏற்ப அது மாற வேண்டும் என்றார் அவர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!